Tamil Cinema News | சினிமா செய்திகள்
தியேட்டர்கள் பிரிப்பதில் சிக்கல்.. பிகில், கைதி படத்திற்கு நடக்கும் கடும் போட்டி
தமிழ்நாட்டில் தற்போது தியேட்டர்களில் எண்ணிக்கை குறைந்து கொண்டே உள்ளது. 800 முதல் 900ல் அடங்கிவிடும். தீபாவளிக்கு இரண்டு மிகப்பெரிய படங்கள் மோதுவதால் தியேட்டர்களை பிடிப்பதில் சண்டை சச்சரவுகள்.
பிகில் படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் முதல் மரியாதை தந்துள்ளனர். விஜய், நயன்தாரா, அட்லி, ஏ ஆர் ரகுமான் எனஎல்லோரும் ஸ்டார்தான் இந்தப் படத்தின் ட்ரைலரை பல சாதனைகளை செய்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 180 கோடிக்கு மேல் சென்று விட்டது.
ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்தால் மட்டும்தான் இந்த போட்ட பணத்தை எடுக்க முடியும் என கூறிக் கொண்டுள்ளனர். பிகிலுக்கு எதிராக கைதியும் வருவதால் தியேட்டர்களை பிரிப்பதில் பிரச்சனை.
கைதி படத்தில் கார்த்தி என்ற ஒரே ஸ்டார்தான். இந்தப் படம் முழுவதும் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. பாட்டு இல்லை, காமெடி இல்லை இதைப் பார்த்த சில திரையரங்கு உரிமையாளர்கள் கைதி படத்தை திரையிட மறுத்துள்ளனர். எனினும் திரையரங்க உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் பேசி பிடித்துக் கொண்டுள்ளனர்.
தீபாவளிக்கு திரையிட்ட பின் படத்தை பார்த்து எந்த படத்திற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என தெரிந்து பின்பு அதற்கு ஏற்றது போல் படத்திற்கு திரையரங்குகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.
நன்றி
குருநாத்
