Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோவாக அறிமுகமாகி சமீபத்தில் மாஸ் வில்லனாக மாறிய நடிகர்கள்..
தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த சில நடிகர்கள் டக்கென வில்லனாக மாறி உள்ளனர். அவர்களில் சிலர் முக்கிய நடிகர்கள். முதலில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தான்.
தமிழ் சினிமாவில் சண்டைக்கு என ஒரு நடிகர் என்றால் அது அர்ஜுன் தான். இவருடைய இந்தியா பற்று படங்கள் பார்த்து பார்த்து வாழ்ந்தவர்கள் தான் அதிகம். ஒரு சமயத்தில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த இவர் இப்போது மங்காத்தா, இரும்பு திரை போன்ற படங்களில் வில்லனாக மாறி உள்ளார்.
அடுத்ததாக பார்த்திபன் தானே இயக்குனர் தானே நடிகர் என பல படங்களில் நடித்தவர். பார்த்திபன் இப்போது வில்லனாகவும் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக சித்திரம் பேசுதடி படத்தில் ஹீரோவாக கலக்கிய நரேன் வில்லனாக மாறி உள்ளார். இப்பொழுது பிரசன்னா ஹீரோவாக அறிமுகமாகி இப்போது வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் மாறியுள்ளார். அடுத்தது வினய் உனக்காக எல்லாம் உனக்காக, ஜெயம்கொண்டான் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர். இப்பொழுது துப்பறிவாளன் படத்தில் வில்லனாகவும் சில படங்களில் குணச்சித்திர நடிகராக உள்ளார்.
அடுத்தது நவரச நாயகன் கார்த்தி இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார். ஆனால் இப்போது வில்லனாக குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்தது அரவிந்த்சாமி, ரோஜா படத்தை பார்த்து இருப்பவர் என்றால் உங்களுக்கு தெரிந்துவிடும். இப்பொழுது தனி ஒருவன், போகன் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
எஸ் ஜே சூர்யா இயக்குனராகவும், ஹீரோவாகவும் கலக்கிய எஸ் ஜே சூர்யா இப்பொழுது ஸ்பைடர், மெர்சல் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
