தினகரன் கைது எதிரொலி. திரையுலக தொடர்புகள் அச்சத்தில்  இருகின்றார்கள் என்கிற செய்தி பகீர் கிளப்புகிறது. காரணம் என்ன..?

தினகரனுக்கும் சினிமா உலகினர் அச்சத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..? இருக்கிறது என்று கிசுகிசு கிளம்பியுள்ளது.

அதாவது தினகரன் குடியிருக்கும் அடையார் பகுதியில் அடிக்கடி சினிமா பைனான்ஸ் வாங்கித்தரும் சில ஏஜண்டுகள் சுற்றுவார்களாம்.

அதிலும் குறிப்பாக ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஒரு சினிமா புள்ளியும் அங்கு அடிக்கடி சுற்றுவாராம்.

ஏற்கனவே மதுரை தாதா பைனான்சியர் ஒருவர் சசிகளவோடு நிதித் தொடர்பு உடையவர் என்கிற பேச்சு கோடம்பாக்கத்தில் பலமாக பேசப்பட்ட ஒன்று.

அதே போல கட்சியில் இணைந்த ஒரு புஷ்டி நடிகை ஒருவரும்  ரொம்பவே நெருக்கமாக இருந்தார் என்று கிசு கிசு கிளம்பி அடங்கிய வேலையில் தினகரன் கைது விவகாரம் சினி உலகிலும் பலத்த அதிர்வுகளை உண்டாக்கி உள்ளது என்கிறார்கள்.

அதே போல மிக நெருக்கமாக இருந்த புஷ்டி நடிகையும் சொந்த மாநிலத்துக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிறார் என்கிறார்கள்.

என்ன நடந்தது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.?