Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல தீபாவளிக்கு தாறுமாறாக தயாரான பிரபலங்கள்! போடு அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..
இந்த வருடம் திருமணமான இளம் தம்பதியர்கள் அனைவரும் தங்களது தல தீபாவளி கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
அந்தவகையில் இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்களின் பட்டியல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எனவே அந்த லிஸ்டில், காமெடி நடிகர் சதீஷ்-சிந்து ஜோடி கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் கல்யாணம் செய்துகொண்டு தற்போது அவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாட தயாராகி உள்ளனர்.
அதேபோல் நடிகர் மகத்-பிராச்சி காதல் ஜோடி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டு, அவர்களும் தல தீபாவளிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு-மஞ்சு பார்கவி ஜோடியும் இந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டு தங்கள் தலை தீபாவளியை கொண்டாட காத்து கிடக்கின்றனர்.
அதேபோல் தெலுங்கு இளம் நடிகர்களான நிதின் மற்றும் ராணா ஆகியோர் தங்களுடைய காதல் மனைவிகளோடு தல தீபாவளிக்காக வெயிட்டிங்.

thala-diwalli-cinemapettai
மேலும் கடந்த அக்டோபர் மாதத்தில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷுக்கும் சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் ரகசிய திருமணம் நடந்தது. அவர்களும் இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
அதேபோல் கொரோனா லாக் டவுனில் மிக எளிமையான முறையில், தனது திருமணத்தை செய்து கொண்ட பிரபல நடிகை காஜல் அகர்வால்-தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவருக்கும் திருமணம் நடந்ததால், அவர்களுக்கும் இதுதான் தல தீபாவளி.

thala-dewali1-cinemapettai
ஆகவே தல தீபாவளி கொண்டாடவிருக்கும் சினிமா பிரபலங்களுக்கு அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலை தளங்களின் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
