Reviews | விமர்சனங்கள்
கிராமமே இணைந்து எடுக்கும் படம் – சினிமா பண்டி விமர்சனம்.. ரெண்டு தேசிய விருது பார்சல்!
என்ன தான் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் கமெர்ஷியல் அம்சம் தூக்கலாக படங்கள் வெளிவந்தாலும், அவ்வப்பொழுது ட்ரெண்ட் செட்டிங் சினிமாக்களும் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அர்ஜுன் ரெட்டி, ஆவ், மிடில் க்ளாஸ் மெலடிஸ் என அடுக்கிக்கொண்டே போகலாம், அந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ள புதிய படம் தான் சினிமா பண்டி (வண்டி).
கொரானா தொற்று காரணமாக திரையரங்கில் ரிலீஸ் ஆகாமல் நெட் பிலிக்ஸ் தளத்தில் மே 14 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம். கதையை வசந்த் மரிங்கந்தி எழுதியுள்ளார் படத்தை அறிமுக இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். பெரும்பாலும் புது முக நடிகர் நடிகையரே இப்படத்தில் நடித்துள்ளனர்.
கதை – கிராமத்தில் இருந்து பக்கத்தில் உள்ள டவுனுக்கு ஷேர் ஆட்டோ ஓட்டுவதே நம் ஹீரோவின் வேலை. இவரது ஆட்டோவில் ஒரு கேமரா கிடைக்கிறது. அதே ஊரில் உள்ள தனது போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் நண்பனை சந்திக்கிறான். இந்த கேமராவை வாடகைக்கு விற்று சம்பாதிக்கலாமா அல்லது விற்று விடலாமா என யோசிக்கின்றனர். பின்னர் தாங்களே படம் எடுக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். நம் ஹீரோ தான் இயக்குனர் அவரின் போட்டோக்ராபர் நண்பரே ஒளிப்பதிவாளர்.
இவர்கள் ஒரு காதல் கதையை படமாக்க முயற்சிக்கின்றனர். சலூன் நடுத்பவன் ஹீரோ, பள்ளி மாணவி ஹீரோயின் என செல்கிறது. ஆட்டோவில் சென்று படத்தில் நடிக்க ஆட்களை பிடிப்பது, ஷூட்டிங் ஸ்பாட் செல்வது என செல்கிறது கதை. படத்தை வெற்றிகரமாக எடுத்து காசு சம்பாதித்து தனது கிராமத்தின் நிலைமையை மற்ற நினைக்கிறார் இயக்குனர் / ஆட்டோ டிரைவர். நாயகியாக நடித்த பெண் ஓடிவிட, காய்கறி விற்பவரை நாயகி ஆக்குகிறார். படத்தின் டிரஸ் கன்டின்யுட்டி பார்த்து சொல்ல ஒரு சிறுவன் என படம் விறுவிறுப்பாகிறது.

cinema bandi
ஒருபுறம் கேமராவை தவறவிட்டவர் அதை தேட, இங்கு ஊர்மக்களுக்கு இவர்கள் முயற்சி பிடித்து போக அவர்களும் உதவுகின்றனர் படத்தை எடுப்பதற்கு . இந்நிலையில் கேமரா உடைகிறது, சரி செய்ய எடுத்து டவுன் செல்ல கேமரா ஓனர் வசம் செல்கிறது. அந்த கேமரா ஓனர் இவர்கள் இயக்கிய படத்தை பார்த்துவிட்டு அதனை எடிட் செய்து இவர்கள் ஊரில் வந்து காமிக்கிறார். மேலும் தனது தோழி ஒருவரின் காமெரா கொடுத்து மீதி படத்தை முடிக்க சொல்கிறார்.
சினிமாபேட்டை அலசல் – இன்றையை தேதிக்கு சினிமா மோகம் கிட்டத்தட்ட அனைவரிடமும் தான் உள்ளது. பலரும் செல் போன் காமெரா வைத்து ஷார்ட் பிலிம் எடுக்கின்றனர். அந்தவகையில் வெள்ளந்தியான கிராமத்து மக்களிடம் ஒரு காமெரா கிடைத்தால் என்னவாகும் என்பதனை கற்பனை கலந்து காமெடியாக சொல்லியுள்ளனர் இந்த டீம்.
டைட்டானிக் போஸ் கொடுப்பது, மாட்டுவண்டி வைத்து கிரேன் ஷாட் எடுப்பது, ஆட்டோவையே உடை மற்றும் இடமாக மாற்றுவது, ஷாட் நடித்துவிட்டு காய் விற்கப்போவது என காமெடி கலாட்டா. அதே நேரத்தில் கணவன் படமெடுக்க ஆட்டோ தவணை கட்டவேண்டும் என மனைவி வேலைக்கு செல்வது, சரியான ரோடு கிடையாது, மின்சார வசதி இல்லை என அந்த மக்களின் வாழ்வியல் துயரங்களையும், அப்பாவித்தனத்தையும் சேர்த்தே படமாக்கியுள்ளனர்.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – இந்த படத்தை நெட்பிலிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்ததன் காரணத்தால் நல்ல ரீச் கிடைத்துள்ளது. ரிலீஸ் ஆன முதல் வாரம் முழுதும் இந்தியளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது இப்படம். கட்டாயம் இப்படத்தை குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து பொழுதை கழிக்கலாம். மொழி பெரிய தடையாக இருக்காது.
சினிமாபேட்டை ரேட்டிங் – 3 /5
