Tamil Cinema News | சினிமா செய்திகள்
அண்ணன் தம்பிக்குள்ள பிரச்சனையா? அடப்பாவமே.. ஓ.. அவங்க பண்ற வேலையா!
அண்ணன் தம்பி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென தமிழ்நாட்டுக்கு விதிவிலக்காக இருந்தவர்கள்தான் அந்த குமரன் பிரதர்ஸ். இவர்களது அப்பா தயாரிக்க தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி தனது தம்பியை சினிமாவில் வளர்த்து விட்டவர் அந்த அண்ணன்.
ரீமேக் படங்கள் இயக்கியது போதுமென சொந்தமாக கதை எழுதி தம்பியை வைத்து இயக்கிய சிங்கள்மேன் என்ற படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. பல மொழிகளில் ரீமேக் கூட ஆகியது. அந்த படத்திற்கு பிறகு சிங்கள்மேன் 2 என்ற கதையை உருவாக்கி கொண்டிருப்பதாகவும் அதை தம்பியின் 25வது படமாக இருக்க வேண்டும் என்பதிலும் அண்ணனுக்கு கொள்ளை பிரியமாம்.
ஆனால் திடீரென தம்பியின் நடவடிக்கைகள் அப்படியே மாமியார் வீட்டின் பக்கம் சாய்ந்துவிட்டதாம். தம்பியின் மாமனார் குடும்பமும் தயாரிப்பாளர் குரூப் தானாம். இதுவரை சீரியல்களை தயாரித்து வந்தவர்கள் தற்போது மருமகனை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகின்றனர்.
அதனால் மருமகனும் தொடர்ந்து அவர்களின் தயாரிப்பிலேயே நடித்துக் கொண்டிருக்கிறாராம். இதனால் கதை எழுதி வைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருந்த அண்ணனிடம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என சொல்லி விட்டாராம். எப்பொழுது கேட்டாலும் பார்க்கலாம் பார்க்கலாம் என சொல்லும் தம்பியை இனி நம்ப முடியாது என மீண்டும் ஒரு ஹிந்தி ரீமேக் படத்தை பிரபல நடிகரை வைத்து இயக்கும் அளவுக்கு இறங்கி விட்டாராம்.
ஒரு காலத்தில் சாக்லேட் ஹீரோவாக இருந்த அந்த நபர் பிறகு தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் காணாமல் போய்விட்டார். இடையில் தன் அப்பா தயாரிப்பில் பல படங்கள் நடித்தாலும் எதுவுமே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இந்தியில் பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்தின் ரீமேக் உரிமையை தந்தையிடம் சொல்லி வாங்கி வைத்துள்ளாராம்.
அதை இயக்ககிறீர்களா என அண்ணனிடம் கேட்க அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் இந்த படத்திற்காக அந்த சாக்லேட் ஹீரோ கிட்டத்தட்ட இருபது கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். நல்லா இருந்த குடும்பத்தில் சாணியை கொண்டு எறிந்தது போல் ஆகிவிட்டதாம் அந்த அண்ணன் தம்பி பாசம்.
