உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண திரையுலகை சேர்ந்த பலரும் அலங்காநல்லூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

புரட்சிகரமாக போராட்டத்திற்கு பிறகு, 2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்துள்ளது.அலங்காநல்லூரில் தான் ஜல்லிக்கட்டு போராட்டம் துவங்கியது. இந்த போராட்டத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ், இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகர் ஆரி ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டனர்.

தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர்கள் லாரன்ஸ் மற்றும் ஆரி, இன்று (பிப்ரவரி 10) அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டை காண நேரில் வந்தனர். இதே போல் இயக்குநர் அமீரும் கலந்து கொண்டார்.

இதனால் திரையுலகை சேர்ந்த மேலும் பலர் இன்று அலங்காநல்லூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.