Videos | வீடியோக்கள்
இணையதளத்தை மிரள விட்ட அனிருத்.. தர்பார் சிங்கிள் ட்ராக் லிரிகல் வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாச்சலம் கலக்கும் படம் தர்பார். இதில் தலைவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து தர்பார் பட அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னால் வெளிவந்த தர்பார் மோஷன் போஸ்டர் இணையதளங்களில் சக்கை போடு போட்டது. அதன்பிறகு முருகதாஸ், படத்தின் டப்பிங் பணி முடிந்துவிட்டது என்றும் ஒரு அப்டேட் கொடுத்தார்.
அதையெல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது அனிருத் முக்கியமான பாடல் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது நவம்பர் 27 ஆம் தேதி தர்பார் படத்தின் சும்மா கிழி என்ற சிங்கிள் மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஸ்டைலான போஸ்டருடன் படக்குழு அறிவித்தது.
அதன்படி தலைவர் ரசிகர்கள் தாறுமாறாக வரவேற்க மேளதாளத்துடன் வெளிவந்த சும்மா கிழி என்ற பாடல் இணையதளத்தை கிழித்துக் கொண்டிருக்கிறது.
இதோ லிங்க் :
