fbpx
Connect with us

Cinemapettai

INCEPTION பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் அடுத்த பட தலைப்பு இது தான். பட ஜானர், நடிக்க ஒப்பந்தம் ஆன இந்திய நடிகை யார் தெரியுமா ?

News | செய்திகள்

INCEPTION பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் அடுத்த பட தலைப்பு இது தான். பட ஜானர், நடிக்க ஒப்பந்தம் ஆன இந்திய நடிகை யார் தெரியுமா ?

உலக சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர். ‘பாலோயிங்’, ‘மெனாண்டோ’, ‘பிரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘பேட்மேன் ட்ரையாலாஜி’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டன்கிர்க்’ போன்ற படங்கள் இவரின் தனித்துவத்தை பேசும் காவியங்கள். என்னதான் டிஜிட்டல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள பொழுதும் ஃபிலிம் ரோலில் படம் பிடிப்பது தான் நோலனின் ஸ்டைல். ஃபிலிமில் படம்பிடிப்பது தான் சரியான முறை என நம்புபவர்.

TENET ( தமிழ் அர்த்தம் – கோட்பாடு)

டென்ட் தான் இவர் இயக்கம் அடுத்த படம். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ரெடியாகும் இப்படத்தில் சர்வேதச அளவில் உளவு பார்ப்பது போன்ற விஷயங்களை மையப்படுத்தி கதை நகருமாம்.

7 நாடுகளில் ஷூட்டிங் நடத்த உள்ளனர். படம் ஜூலை 17 , 2020 இல் ரிலீஸ் ஆகுமாம். 65 mm பிலிம் மற்றும் imax காமெராவில் படமாக்க உள்ளார்.

tenet

இப்படத்தில் நடிகை “டிம்பிள் கபாடியா” நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பல முன்னணி நடிகர் – நடிகைகள் நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் நோலன். அவர் மனைவியுடன் இணைந்து தயாரிக்கிறார். இசை – லட்விக் கோணர்னசன். ஒளிப்பதிவு ஹோயட் வான் ஹோய்சமோ. எடிட்டிங் – ஜெனிபிர் லேம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top