Videos | வீடியோக்கள்
டயம் ட்ராவலில் இது வேற லெவல்.. கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ ட்ரைலர் சொல்வதென்ன தெரியுமா?
உலக சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர் நோலன். இவரின் 11 வது படமே டெனெட். சமீபத்தில் யூ ட்யூபில் வெளியான ட்ரெய்லர் சுமார் 7 மில்லியன் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங் பட்டியலில் உள்ளது. 2000ம் ஆண்டு மெமென்டோ, 2010ல் இன்சப்ஷன், 2020ல் டெனெட் என இப்படங்களுக்குள் ஒரு லிங்க் உள்ளது. இசை – லட்விக் கோணர்னசன். ஒளிப்பதிவு ஹோயட் வான் ஹோய்சமோ. எடிட்டிங் – ஜெனிபிர் லேம்.
ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ரெடியாகும் இப்படத்தில் சர்வேதச அளவில் உளவு பார்ப்பது போன்ற விஷயங்களை மையப்படுத்தி டயம் ட்ராவல் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, , டென்மார்க், எஸ்தோனியா, இத்தாலி, நார்வே, லண்டன் மற்றும் அமெரிக்கா என மொத்தம் 7 நாடுகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நிகழ்ந்துள்ளது. படம் ஜூலை 17 , 2020 இல் ரிலீஸ்.
TENET ( தமிழ் அர்த்தம் – கோட்பாடு) : இப்படத்தில் கடந்த காலம் செல்வதை “ரிவர்ஸ் தியரி” வாயிலாக சொல்லியுள்ளார். டயம் ட்ராவல் படங்களில் இது ஒரு புரட்சி. கடந்தகாலத்துக்கு செல்ல வேண்டுமென்றால் நிகழ்காலத்தில் இருந்து படிப்படியாக தான் பின்னோக்கி செல்ல முடியும் என்பது இவரின் இப்பட கான்செப்ட். அப்படி சென்று தான் நம் ஹீரோ மூன்றாம் உலகப் போரை தடுக்கவேண்டும்.
படம் நிகழ்காலத்தில் முன்னோக்கி செல்ல, பின்னோக்கி ஹீரோ மற்றும் அவர் டீம் செய்யப்போகும் சாகசங்களின் முன்னோட்டமே இந்த ட்ரைலர்….
