உலக சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர். ‘பாலோயிங்’, ‘மெனாண்டோ’, ‘பிரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘பேட்மேன் ட்ரையாலாஜி’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டன்கிர்க்’ போன்ற படங்கள் இவரின் தனித்துவத்தை பேசும் காவியங்கள்.

Christopher Nolan with his wife

ஃபிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் நடத்தும் “Reframing the Future of Film ” என்ற நிகழ்ச்சி மார்ச் 30ம் தேதி மும்பையில் நடந்தது. ஃபிலிம் தொழில்நுட்பத்தில் படம் பிடிக்கும் முறையை சிறந்தது என அதில் பேசுவதராக வந்தார் நோலன். அவர் மனைவி எம்மா தாமஸ் அவர்களும் உடன் வந்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஷாருக்கான் மற்றும் இந்திய சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பின் கமல் மற்றும் நோலனின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதனை போட்டோ உடன் கமலே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Christopher Nolan Kamalahaasan

“திரு.கிறிஸ்டோஃபர் நோலன் அவர்களை சந்தித்தேன். டன்க்ரிக் திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டேன். மேலும் அவர் பார்த்து ரசிக்க ‘ஹே ராம்’ பட டிவிடியை கொடுத்துள்ளேன். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது அவர் பாபநாசம் படத்தை பார்த்தாராம்.”

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

சும்மா பெயர் வைச்சாங்க உலகநாயகன் என்று. அடி சூப்பர் போ !