ஹாலிவுட்

கிறிஸ்டோஃபர் நோலன்

உலக சினிமாவில் மோசட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர். இவர் படத்திற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ‘பாலோயிங்’, ‘மெனாண்டோ’, ‘பிரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘பேட்மேன் ட்ரையாலாஜி’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டன்கிர்க்’ போன்ற படங்கள் இவரின் தனித்துவத்தை பேசும் காவியங்கள் என்றால் அது மிகையாகாது. என்னதான் டிஜிட்டல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள பொழுதும் ஃபிலிம் ரோலில் படம் பிடிப்பது தான் நோலனின் ஸ்டைல். ஃபிலிமில் படம்பிடிப்பது தான் சரியான முறை என நம்புபவர் மற்றும் அடுத்தவருக்கு எடுத்த்து சொல்பவர் இவர்.

ஃபிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் நடத்தும் “Reframing the Future of Film ” என்ற நிகழ்ச்சி மார்ச் 30ம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது. எனவே மார்ச் 29 – ஏப்ரல் 1 வரை மும்பையில் தங்க இருக்கிறார் இயக்குனர் நோலன்.

அதிகம் படித்தவை:  ஹாலிவுட் ரசிகர்களுக்கு இல்லை...இந்திய ரசிகர்களுக்கு தான் முதல் ஷோ - "தி ஜங்கிள் புக்"
Christopher Nolan

இரண்டு மணிநேரம் நடக்கும் இந்த நிகழ்வில் எனவே ஃபிலிம் தொழில்நுட்பத்தில் படம் பிடிக்கும் முறையை தொடர்வது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்யவுள்ளார். இந்திய சினிமா துறையை சேர்ந்த அனுராக் காஷ்யப், அமிதாப் பச்சன், அமீர்கான், கமல்ஹாசன், மணிரத்னம், ஃபர்ஹான் அக்தர், ஷாம் பெனகல் , ஷாருக் கான் சந்தோஷ் சிவன் போன்றவர்களும் பங்கேற்க்கவுள்ளனர்.

நோலன் இந்த நிகழ்ச்சி குறித்து அறிந்ததும் தானாகவே முன் வந்து இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தாராம். மேலும் ப்ரோக்ராம் முடிந்ததும் நோலனின் படமான l ‘டன்கிர்க்’ ஸ்பெஷல் ஷோ திரை இடுகிறார்கள். இப்படத்திற்க imax தியேட்டர் மாற்றி அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நாம் 4 கே தொழில் நுட்பத்தை பற்றி பேசும் இந்த வேலையில் இப்படத்தினை 18 கே வடிவில் பார்க்க போகிறார்கள் நம் செலிப்ரட்டிகள். இதற்கான பிலிம் ரோல் இந்தியாவிற்கு கொண்டு வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  வசூலில் சக்கை போடு போடவிருந்த படத்தை திருடி ஹாலிவுட்டை கதிகலங்க வைத்த இணையத்திருடர்கள்!

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

நோலன் போலவே, உலக பேமஸ் இயக்குனரான குவன்டைன் டொரண்டினோவும் இன்றளவும் பிலிம் டெக்னாலஜி வாயிலாக தான் தன் படங்களை எடுத்து வருகிறார்.