கொலைவெறியோடு சுத்தும் கார்.. பீதியை கிளப்பும் கிறிஸ்டீன் படம்

ஜான் கார்பென்டர் இயக்கத்தில் வெளிவந்த கிறிஸ்டியன் என்ற ஒரு த்ரில்லர் படத்தை பத்தி இன்னைக்கு பாக்கலாம். இது ஹாரர் திரைப்படம் மூவி ன்னு சொல்லுவாங்க ஆனா இதுல பேய் கிடையாது. ஆனா ஒவ்வொரு சீனும் கண்டிப்பா பதட்டத்தில்லேயே வைத்திருக்கும். இந்த படம் ஒரு ரெட் ரோஸ் டைப்பான படம். இந்த ரெட் ரோஸ் அப்படிங்கறது ஒரு காலகட்டத்தில் ஒரு திரில்லர் கலந்த ஒரு டேஞ்சரான மூவிஸ். அது மாதிரி படங்கள் எல்லாமே ஒரு மாதிரியா வித்தியாசமாகத்தான் இருக்கும். சிகப்பு கலரை ஹைலைட் பண்ணி வச்சிருப்பாங்க.

Christine-1983-Movie-1
Christine-1983-Movie-1

கிறிஸ்டின் படம் 1883 இல் வெளிவந்த படம். பழைய படம் தானே அப்படி நினைத்து விட்டுறாதீங்க. இது இன்னிக்கு பார்த்தாலும் உங்களுக்கு புதுசா தான் இருக்கும். இந்த படம் வந்த  பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படம் இதேபோல் பார்த்து இருப்போம். நம்ம ஆளுங்க சுட்டு எடுத்ததுதான்.

கிறிஸ்டின் படத்தின் கதை இதுதான் ‘ஒரு பேய் பிடித்த ஒரு ரெட் கலர் கார். அந்தக் காரை கண்டுபிடித்த நாளிலிருந்து அந்த கம்பெனிக்கு தினமும் ஒரு ரத்த காவு வாங்கி கிட்டே இருக்கும். ஏதாவது ஒரு பிரச்சினை வந்துட்டே இருக்கும். அடிபட்டு, வெட்டுப்பட்டு என இப்படி ஏதாவது ஒன்னு ரத்தம் மட்டும் வந்து கொண்டே இருக்கும்.

Christine-1983-Car-Damaged-Scene-1
Christine-1983-Car-Damaged-Scene-1

அதனால கம்பெனிக்காரங்க என்ன பண்ணுவாங்க, இந்த கார் வைத்திருந்தால் ராசியே இல்லை என அந்த காரை பழைய இரும்பு கடையில் போடுற மாதிரி வெளியே தூக்கி போட்டு விடுவார்கள். அதுலேந்து அடுத்த அதிரடி ஆரம்பிக்குது.

Christine-1983-Car-Damaged-Scene-2
Christine-1983-Car-Damaged-Scene-2

அடுத்து ஒரு ரொம்ப சாதுவான பையனை காமிப்பாங்க.  அவன் ரொம்ப சாதுவா கோழையா இருக்கறதுனால எல்லாரும் அவனை கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அவன் ரொம்ப கடுப்பாகி வாழ்க்கையோட விரக்திலையே இருப்பான். அவனுக்கு இந்த சிவப்பு கலர் கார் கிடைக்குது.

Christine-1983-Car-Damaged-Scene
Christine-1983-Car-Damaged-Scene

அந்த கார் கிடைச்ச உடனே அம்பியிலிருந்து அந்நியன் மாதிரி ஒரு மாற்றம் வரும். அந்தப் பையனுக்கு பயங்கர வித்தியாசமான வீரம் கோபம் எல்லாம் கலந்து வரும். அப்படி என்னதான் நான் கார்ல இருக்கு? எதனால் இப்படி ஆகுது.?

இந்தப் பையனையும் அந்தக் காரையும் யார் கண்ட்ரோல் பண்ணுவது கடைசியில என்னதான் நடக்குது என்பதுதான் கதை. முழு படம் படத்தை பார்த்த அனைவருக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். இந்தப் படம் நெட்பிளிக்ஸ்- இல் இருக்கிறது.

Next Story

- Advertisement -