fbpx
Connect with us

Cinemapettai

FORD vs FERRARI.. (கார்ப்ரேட் vs ரேஸிங்) – திரைவிமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

FORD vs FERRARI.. (கார்ப்ரேட் vs ரேஸிங்) – திரைவிமர்சனம்

லீ மான்ஸ் (24 Hours of Le Mans ) என்ற ரேஸை மையப்படுத்தி ஆட்டோமொபைல் துறையில் ஜாம்பவான்களான போர்ட் மற்றும் பெர்ராரி இடையே நடக்கும் கார்ப்ரேட் யுத்தமே இப்படத்தின் கதை. கரோல் ஷெல்பி ரோலில் மாட் டாமன் மற்றும் கென் மைல்ஸ் ரோலில் கிறிஸ்டியன் பேல் முதனமை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேம்ஸ் மங்கோல்ட் படத்தை இயக்கியுள்ளார். 1966 இல் நடந்த ரேஸ் தான் கதைக்களம் எனினும் பயோபிக் ஆகவே இருப்பினும் சினிமாவிற்குரிய கருத்து சுதந்தரத்தை எடுத்துக்கொண்டு விட்டனர் இப்படக்குழு.

கதை – இரண்டு ஆட்டோமொபைல் நிறுவங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என்று கூட சொல்லலாம். அமெரிக்காவின் போர்ட் நிறுவனம் நம்பர் 1 ஆக திகழ்கிறது வாகனங்கள் விற்பனையில். எனினும் ரேஸிங்கில் கலக்கும் பெர்ராரி நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் தோல்வியை சந்திக்கிறது. நாமும் ரேஸ் கார் ரெடி செய்து பந்தயத்தில் கலந்து வெற்றி பெறவேண்டும் என உத்தரவு இடுகிறார் இரண்டாம் ஹென்றி போர்ட்.

இதனை சாத்தியமாக்க புதிய கார் டிசைன் செய்ய லீ மான்ஸ் வென்ற ஒரே அமெரிக்கரான கரோல் ஷெல்பி அவர்களை அணுகின்றனர் நிர்வாகிகள். அவர் மெக்கானிக் மற்றும் ரேஸிங் ஓட்டும் கென் மைல்ஸ் என்பவரையும் தன் டீம்மில் இணைத்து எவ்வாறும் போர்ட் வென்றது என்பதே மீதி கதை.

FORD VS FERRARI

சினிமாபேட்டை அலசல் – க்ளாஸ் சினிமா என எதனை ஒதுக்கிவிட முடியாது. கார் மற்றும் ரேஸிங் பற்றி நுணுக்கங்கள் இருந்தாலும், கமெர்ஷியல் வாசமும் கலந்த மாஸ் ஆக்ஷன் படம் தான் இது. அமெரிக்கர்கள் கெத்து என்பதனை உலகிக்கிற்கு உணர்த்தும் மற்றோரு படம்.

எனினும் இத்தாலியின் பெர்ராரி பற்றி தவறாக சித்தரித்தது, கம்பெனியின் மேல் பந்தயம் வைப்பது என வரலாறுக்கு புறம்பாக பல காட்சிகள். எனினும் கிளைமாக்சில் உண்மையை புரியும் படி சொல்லி அனைவரின் பாராட்டையும் க்ளாப்சயும் பெறுகிறது இந்த டீம்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – கார் மற்றும் ரேஸிங் பிரியர்கள் என்ற எல்லை கடந்த தரமான படைப்பு இப்படம். நல்ல திரையில், சவுண்ட் தூக்கலாக பாப் கார்ன் சாப்பிட்டுக்கொண்டே பார்க்கும் பீல் குட் மூவி இது.

சினிமாபேட்டை ரேட்டிங் – 4/5

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top