ரவிச்சந்திரன் அஷ்வின், கே எல் ராகுல் பற்றி கிறிஸ் கெயில் என்ன சொன்னார் தெரியுமா ?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீமுக்காக ஆடி வரும்  கிறிஸ் கெயில் தன் கேப்டன்  அஷ்வின்  மற்றும் சக துவக்க ஆட்டக்காரர் ராகுல் பற்றி பேட்டியில் கூறியதன் தொகுப்பே இந்த பதிவு

“என்ன நடந்ததே என்றே தெரியவில்லை. (ஏன்  அவர் இந்த பார்மட் ஆடுவதில்லை என)  இந்தியாவிற்காக சிறப்பாக பந்து வீசும் நபர். கிரிக்கெட்  மீது பேஷன் உள்ள பௌலர், அதே போல் தான் அவர் தலைமையும். டீம்மின் மீது முழு நம்பிக்கை வைப்பார். அவரை கேப்டனாக பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.” என 32 வயது அஸ்வின் பற்றி சொன்னார்.

அடுத்ததாக 27 வயது ராகுல் ” இன்றைய இந்திய வீரர்களில் டக்கென்ன நினைவுக்கு வருவதில் இவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட் அணியில் கோலி போல் சிறப்பாக வருவார் என நம்புகிறேன். இந்திய  அணியில் கோலி இடத்துக்கு மிகச்சரியானவர் கே.எல்.ராகுல் தான்.” என்றார். மேலும் இப்பொழுதே  அந்த நெருக்கடியை அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை  என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment