fbpx
Connect with us

சாதனை படைத்த கிரிஸ் கெயில்- பைன் போட்ட ஐபிஎல் நிர்வாக குழு

Sports | விளையாட்டு

சாதனை படைத்த கிரிஸ் கெயில்- பைன் போட்ட ஐபிஎல் நிர்வாக குழு

கிறிஸ்டோபர் ஹென்றி கெயில்

ஜமைக்காவில் பிறந்தவர், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டவர். டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி 20 என எந்த விதமான பார்மட் என்றாலும் தன் அடித்து ஆடும் திறமையால் ஆட்டத்தின் போக்கை தனி ஆளாக மாற்றுபவர்.ஜாம்பவான் என்பது அனைவரும் அறிந்ததே.

41 வயது வாலிபர். இந்த ஐபிஎல் சீசன் கிங்ஸ் XI பஞ்சாப் டீமுக்காக விளையாடி வருகிறார். சீசன் துவக்கத்தில் மாயங் அகர்வால் மற்றும் கேப்டன் ராகுல் பேட்டிங்கில் கலக்க இவருக்கு டீம்மில் இடம் இல்லை. இரண்டாவது பாதி ஐபிஎல் போட்டிகளில் தான் மனிதருக்கு வாய்ப்பு கிடைத்தது, அதுவும் மூன்றாவது வீரராக களம் இறங்க.

Chris Gayle

யூனிவெர்ஸ் பாஸ் அதன் பின்னர் தனி ஆளாக போட்டிகளின் முடிவை மாற்றி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் மனிதர் 99 ரன்கள் 63 பாலில் எடுத்து அவுட் ஆனார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் போல்ட் ஆனார். அப்பொழுது மனிதர் கடுப்பில் பேட்டை தூக்கி எறிந்தார். ( வீடியோ லிங்க் )

இது ஐபிஎல் விடுமுறை படி லெவல் 1 (2 .2 ) குற்றம். ஏனவே இதன் காரணமாக அவரது மேட்ச் பணத்தில் 10 % அபராதம் விதித்துள்ளனர். மேற்கொண்டு நடுவர் என்ன முடிவு சொல்வார் என்பதும் தெரியவில்லை.

கெயில் சிறப்பாக விளையாடியும் ராஜஸ்தான் டீம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று கெயில் டி 20 போட்டிகளில் 1000 சிக்ஸர்கள் என்ற சாதனையை படைத்தார்.

கெயில் டி 20 யில் படைத்த சாதனைகளின் தொகுப்பு ..

டி 20 போட்டிகளில் 1001 சிக்ஸர்கள், 1041 பௌண்டரிகள் அடித்துள்ளார். 1001 சிக்ஸர்களுடன் முதலிடம். பொல்லார்ட் 690 மற்றும் மக்குளம் 485 அடித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் 349 , வெஸ்ட் இண்டீஸ் பிரீமியர் லீக்கில் CPL 162 \, பங்களாதேஷ் லீக்கில் 132, மற்றும் டி 20 உலகக்கோப்பையில் 60 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

ஆர் சி பி அணிக்காக அதிகபட்சமாக 263, ஜமைக்கா டல்வாலஸ் டீமுக்காக 124, 105 வெஸ்ட் இண்டீஸ் டீமுக்காக இவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை.

மேலும் பஞ்சாபுக்கு விளையாட ஆரம்பித்த பின் 82 சிக்ஸ் அடித்துள்ளார். ஐபிஎல் இல் பஞ்சாபுக்கு எதிராக 61 முறை சிக்ஸ் அடித்துள்ளார்.

2015 ஆண்டு மட்டும் 135 சிக்ஸ் அடித்துள்ளார். 6 வருடங்கள் இவர் 100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளார்.

ப்ராவோவிற்கு எதிராக 17 ,. தாஹிருக்கு எதிராக 12 , சாவ்லா, ரஷீத் கான், அபிரிடிக்கு எதிராக 11 சிக்ஸ் அடித்தது தனிப்பட்ட பௌலருக்கு எதிராக இவர் புரிந்த சாதனை.

10 சிக்ஸர்களுக்கு மேல் டி 20 போட்டியில் இதுவரை 18 முறை அடித்துள்ளார். அடுத்தபடியாக லிஸ்டில் இருப்பது ஸ்ரேயாஸ் ஐயர், ரசல். லெவிஸ். இவர்கள் மூன்று போட்டிகளில் அடித்துள்ளனர்.

ஒரே போடியில் அதிகபட்சமாக கடந்த 2017 பங்களாதேஷ் லீக் பைனலில் 18 சிக்ஸ் அடித்தார். 2013 இல் ஆர் சி பி டீமுக்காக 17 சிக்ஸ அடித்தார். வேறு எந்த பேட்ஸ்மானும் 16 சிக்ஸர்களை தாண்டியது இல்லை டி 20 யில்.

Continue Reading
To Top