Ashwin-Vijay-post

வாழ்க்கையில நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கணுமா அதுக்காண்டி சித்தனாக புத்தனாக ஆகணும்னு அவசியமில்லை. நம்மளை நாமளே தெரிந்துகொள்ள ஒரு சின்ன சிந்தனை என்னவென்றால் நம்ம தினமும் பழகுற ஐந்து பேரோட கலவைதான். இது பலதரப்பட்ட வகையில் ஆராய்ந்து விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டவை.

நம் வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷம், துக்கம், சாதிக்க முடியலையே, வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது என்று நினைக்கிற உங்க மனச கட்டுப்படுத்த போறது அந்த அஞ்சு பழக்கவழக்கங்கள் தான். அந்த ஐந்து பேரோட பழக்கவழக்கங்கள் எண்ணங்கள் சிந்தனைகள் அனைத்தையும் நம்ம நமக்கு தெரியாமலேயே உள்வாங்கிக்கொண்டு உடம்புக்குள்ளே மனசுக்குள் ஏத்திகிட்டு இருக்கும்.

அதிகம் படித்தவை:  முதுகு வலி இல்லாமல் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் 9 வழிகள்.. தலைமுறைக்கு கற்றுக் கொடுங்கள்!

இப்ப இதுல இருந்து என்ன தெரிஞ்சுக்கணும் பாத்தீங்கன்னா ரொம்ப முக்கியமா நீங்க அந்த அஞ்சு பேரு தேர்ந்தெடுக்கணும். இதுவரை எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனா இனிமேல் நீங்க வாழும் சூழ்நிலையே நீங்களே சந்தோஷமா அமைத்துக் கொள்ளலாம். முக்கியமா என்ன சொல்றோம் அப்படின்னா உங்க வாழ்க்கை எப்படி இருக்கணும் ஒவ்வொரு நொடியும் எப்படி சந்தோஷமா வச்சுக்கணும் அப்படிங்கற நீங்களே தீர்மானிக்கலாம். இப்போ நீங்க அந்த அஞ்சு பேரு உங்க வாழ்க்கைக்காக தேர்ந்தெடுங்கள் அவர்களுடைய செயல் தான் உங்களோட பிரதிபலிப்பாய் இருக்கும்.

அதிகம் படித்தவை:  தினமும் இரவில் பூண்டு ஒரு பல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அதற்காக இப்போ நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கும் நண்பர்களை வெறுக்க வேண்டும் என்று கூறவில்லை. நீங்க நினைச்ச மாதிரி வாழ்றதுக்கு தகுதியான அஞ்சு பேரு வழி பின்பற்றி சென்றால் வாழ்க்கை மிக சந்தோசமாக அமையும். என்னோட வாழ்க்கையில அந்த அஞ்சு பேர்ல ஒருத்தர் ‘Dr.அஸ்வின் விஜய்’ என்பதை இந்த இடத்தில் குறிப்பிட காரணம் என்னவென்றால் இது அனைத்தும் அவருடைய பதிவுகள் தான்.இனி இது போன்ற பதிவுகளை தினமும் எழுதுவோம்.

By Arun