fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சோழவரம் அருகே போலீஸ் வாகன சோதனையால் கால் உடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

suicide

Tamil Nadu | தமிழ் நாடு

சோழவரம் அருகே போலீஸ் வாகன சோதனையால் கால் உடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: சோழவரம் அருகே போலீஸ் வாகன சோதனையில் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சோலையம்மன் நகரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தமது இருசக்கர வாகனத்தில் செங்குன்றத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது காந்திநகரில் வாகன சோதனை மேற்கொண்ட சோழவரம் போலீசார் பிரியதர்ஷினி இருசக்கர வாகனத்தை மடக்கியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரியதர்ஷினி மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் கால் உடைந்து போனது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பெண்ணின் விபத்திற்கு காரணமான ஊர்காவல்படை காவலர் பைக்கிற்கு தீ வைத்து கொளுத்தினர்- அத்துடன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்போது பெரும பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரியதர்ஷினி தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவனர்.

போலீசார் வாகன சோதனையில் விபத்து காரணமாக கால் உடைந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top