Connect with us
Cinemapettai

Cinemapettai

actor cho-movie

Entertainment | பொழுதுபோக்கு

70களில் மிரளவிட்ட சோ ராமசாமி.. வாயை மூடி சென்ற அரசியல் கட்சிகள்

பல லட்சக்கணக்கான வாசகர்களை கொண்டிருந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் சோ ராமசாமி. இவரின் கணிப்பு எப்போதுமே சரியாக இருக்கும் என பல தலைவர்கள் இவரிடம் ஆலோசனை கேட்ட தான் செயல்படுவார்கள். சோ தன்னுடைய நகைச்சுவை மற்றும் நையாண்டி எழுத்துக்களால் அரசியலை தன் பத்திரிக்கை மூலம் விமர்சித்தார்.

பல அரசியல் தலைவர்களும் சோவை பார்த்து அஞ்சி நடுங்கினர். சோ எடுக்கப்பட்ட முகம்மது பின் துக்ளக் படம் திராவிட முன்னேற்றக் கழக கட்சியையும், அப்போது பிரைம் மினிஸ்டர் ஆக இருந்த இந்திராகாந்திகவும் மறைமுகமாக தாக்கியவாறு அமைந்திருக்கும்.

1971 இல் சோ ராமசாமி இயக்கி, நடித்திருந்த படம் முகம்மது பின் துக்ளக். அரசியலில் நடக்கும் அவலத்தை தோலுரித்துக் காட்டிய படம் இது. மக்கள் தவறான அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து முகலாய மன்னன் முகம்மது பின் துக்ளக் மீண்டும் பிறந்துள்ளதாக படத்தின் கதை அமைந்து இருக்கும்.

தற்போதே அரசியல் வசனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்தால் அந்தப் படங்கள் வெளியாக பல இடையூறுகள் வருகிறது. அப்போதைய காலகட்டத்தில் முகம்மது பின் துக்ளக் படத்திற்கு பல சர்ச்சைகள் எழுந்ததும்.

அரசியல்வாதிகளின் மிரட்டல் காரணமாக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் படப்பிடிப்பில் பாதியிலிருந்து ஓடிவிட்டனர். ஆனால் அவை அனைத்திற்கும் அசராமல் சோ மட்டும் தூணாக நின்று படத்தை வெளியிட்டார்.

முழுமையாக அரசியலை தோலுரித்து காட்டிய முகம்மது பின் துக்ளக் படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தும் அவை அனைத்தையும் சமாளித்தார் சோ. அதன்பின் அவர் அப்படித்தான் என பல அரசியல் கட்சி தலைவர்களும் வாயை மூடி சென்றனர்.

Continue Reading
To Top