fbpx
Connect with us

70 புதுமுக நடிகர்கள் கலக்கும் சியான்கள் திரைவிமர்சனம்.. தரம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

70 புதுமுக நடிகர்கள் கலக்கும் சியான்கள் திரைவிமர்சனம்.. தரம்!

சியான்கள் படத்தில் கரிகாலன், ரிஷா மற்றும் நளினிகாந்த் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் கரிகாலன் பணியாற்றியுள்ளார். புதுமுக நடிகர்களான 70 நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் மிக சிறப்பாக பார்க்கப்படுகிறது.

புதுமுக நடிகையான ரிஷா இந்த படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். அதுமட்டுமில்லாமல் நளினிகாந்த் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்படி படத்தின் இயக்குனர் இவரது கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார்.

chiyangal

chiyangal

படத்தின் கதை – வயதான ஐந்து தாத்தாகளுக்கு இருக்கும் ஆசையும் இளைஞர்களை போல் இவர்கள் செய்யும் சேட்டையும் தான் இந்தப் படத்தின் கதை கருவாக அமைந்துள்ளது. மேலும் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமான முறையில் காட்டியது படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

இசை – முத்தமிழ் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இப்படம் வெற்றி அடைவதற்கு படத்தின் இசையும் காரணமாக அமைந்தது.

ஒளிப்பதிவாளர் – இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாபு குமார் I.E பணியாற்றியுள்ளார். இவர் எடுத்த பட காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் கண்களில் அப்படியே கிராமத்துக்கு கொண்டு சென்றது என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு இவரது ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருந்தது.

மேலே குறுப்பிட்ட அனைத்தும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன. இருப்பினும் மற்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் ஒரு சில இடங்களில் லாஜிக்கல் ரசிகர்களுக்கு புரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

chiyangal

chiyangal

Continue Reading
To Top