Tamil Cinema News | சினிமா செய்திகள்
சியான் விக்ரமின் 58வது பட தலைப்பு,நடிகை யார் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்
Published on
நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா முதல் படம் என்பதால் மிகுந்த கவனம் செலுத்தி அதனை வெளிட்டனர். இதனால் அவர் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
தற்போது இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்துடன் தனது 58-வது படத்தை நடிக்க உள்ளார். இந்த படத்தில் விக்ரம் 25 வேடங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்தப் படம் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இப்படத்தை தயாரிக்க உள்ளது.
இந்த படத்திற்கு ‘அமர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமில்லாமல் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்துக் கொண்டிருக்கின்றனர் விக்ரம் ரசிகர்கள்.
