Tamil Cinema News | சினிமா செய்திகள்
மகனுடன் களமிறங்கும் சீயான் விக்ரம்.. வசூல் அள்ளுவதற்கு புதிய யுக்தி
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் சிலர் சந்தித்த அதே கஷ்டங்களை தான் தற்போது சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சந்தித்துக் கொண்டிருக்கிறார். முதல் படத்தில் நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்தாலும் வசூல் ரீதியாக நினைத்ததை அடைய முடியவில்லை.
பிரபல தெலுங்கு படம் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தில் நடித்தார் துருவ் விக்ரம். எந்த வாரிசு நடிகர்களுக்கும் கிடைக்காத ஓப்பனிங் துருவ் விக்ரம்க்கு கிடைத்தது. இதற்கு முழுக்க முழுக்க உறுதுணையாக இருந்தவர் சியான் விக்ரம்.
எப்படியாவது மகனை சினிமாவில் ஒரு நல்ல நிலைமையில் நிறுத்திவிட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆதித்ய வர்மா படம் வியாபார ரீதியாக வெற்றி இல்லை. இதனால் மீண்டும் எப்படியாவது விட்டதை பிடித்து விட வேண்டும் என தற்போது பல புதிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு பிரபல இயக்குனர் சொன்ன கதையில் அப்பா மகன் இருவரும் சேர்ந்து நடிக்குமாறு கதை அமைப்பு உள்ளதாம். இதனால் எப்படியாவது இந்த படத்தை டேக் ஆஃப் செய்துவிட வேண்டும் என இருவரும் முயற்சியில் இறங்கியுள்ளனராம்.
விரைவில் இந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாஸ் பண்ணுங்க..
