Connect with us
Cinemapettai

Cinemapettai

chiyaan60-

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாலு நாளைக்கு முன்னாடியே லீக்கான சீயான் 60 பட டைட்டில்.. இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை கொடுக்காத முன்னணி நடிகர்கள் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார் சீயான் விக்ரம். என்னதான் புதிய புதிய முயற்சிகள் எடுத்தாலும் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்பதே சோகமான விஷயம்.

இருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து நடிக்கும் படங்களில் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக ரெடியாக இருக்கும் திரைப்படம் தான் சீயான் 60.

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் சீயான்60 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்ததை படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு உறுதிசெய்தனர்.

விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் சீயான் 60 படத்தை தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் அவரது கால்ஷீட் பிரச்சனை காரணமாக சந்தோஷ் நாராயணன் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி சீயான் 60 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதை வித்தியாசமான போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்தனர். இது சீயான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் குறித்த தேதிக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே சீயான் 60 படத்தின் டைட்டில் இணையத்தில் கசிந்துள்ளது. இப்போதைக்கு சீயான் 60 படத்திற்கு மகான் என பெயர் வைத்துள்ளார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் மாறவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் வலைப்பேச்சு நண்பர்கள்.

chiyaan60-cinemapettai0

chiyaan60-cinemapettai0

Continue Reading
To Top