Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீயான் விக்ரம் குடும்பத்திலிருந்து திரைக்கு வரும் இன்னொரு நபர்.. அவருக்கு ஜோடி இந்த பிக்பாஸ் நாயகியா?
இன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். கதை மற்றும் கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொள்ளவும் தயங்கமாட்டார்.
அதேபோல் இவரது மகன் துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா எனும் படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் படமாக இது உருவாகி இருக்கிறது.
தற்போது சியான் விக்ரமின் குடும்பத்திலிருந்து இன்னொருவரும் சினிமாவுக்கு வர இருக்கிறது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவரது மகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விக்ரமின் மருமகனும் தற்போது தமிழ் சினிமாவில் களம் இறங்க இருக்கிறார்.

vikram-relative
இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், படத்தின் கதாநாயகியாக பிக்பாஸ் 2 நாயகி ஐஸ்வர்யா தத்தா நடிக்க இருக்கிறார். இப்படத்தை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
