Tamil Cinema News | சினிமா செய்திகள்
சித்ராவிற்கு இந்த பிரச்சினை இருந்தது என கூறிய சக நடிகை.. எதிர்பார்க்காமல் வந்த பரிசோதனை ரிப்போர்ட்!
சமீபகாலமாக தற்கொலை என்பது சாதாரணமாகி விட்டது. அந்த வகையில் நேற்று சின்னத்திரை நடிகையான விஜே சித்ரா நட்சத்திர ஹோட்டல் தற்கொலை செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னதான் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும் பிரச்சினை வருவது ஒன்றும் புதிதல்ல என்பதற்கு இந்த தற்கொலை ஒன்றே சான்று ஆகும்.
இவர் நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா, நண்பேன்டா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் இன்றும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த அளவிற்கு இவருடைய சுட்டித்தனமான நடிப்பு மக்களை வெகுவாக பாதித்துள்ளது என்பது நம்மால் உணர முடிகிறது.
ஒரு மனிதனின் வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறிவிடலாம் என்பதற்கு இவரது மரணமும் ஒரு காரணமாகும். என்ன தான் வாழ்க்கையில் பிரச்சினை இருந்தாலும் அதனை சமாளித்து வாழ்வதுதான் மனித வாழ்க்கை என்பது பலருக்கும் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே சித்ரா விற்கு ஏற்பட்டஒரு சாதாரண பிரச்சனையைத் எதிர்கொள்ள முடியாமல் மரணத்தை நோக்கி போய் சென்றது திரை பிரபலங்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவரது மரணத்தைப் பற்றி அடுக்கடுக்கான உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நடிகை ஷாலு ஷம்மு சித்ராவின் லைஃப் பார்ட்னர் பற்றி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதை பார்க்கும்போது அவரது லைஃப் பார்ட்னர் இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாமா என சந்தேகம் நிலவி வரும் நிலையில்.
மற்றொரு நடிகையான சரண்யா துராடி விஜே சித்ராவின் மரணத்தைப்பற்றி கூறியுள்ளார். அதாவது நானும் விஜே சித்ராவும் ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தோம் அப்போது வாழ்க்கையைப் பற்றியும் அவரது பிரச்சினையை பற்றியும் சில விஷயங்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
அதாவது திருமண வாழ்க்கையும் அவர் புதிதாக வீடு வாங்கியிருந்தார் அதனால் ஏற்பட்ட பணப் பிரச்சினையும் பற்றி அவரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதற்கு சரண்யா என்னதான் பணபிரச்சனை இருந்தாலும் பொறுமையாக அதனை எதிர்கொண்டு இருக்கலாம். இப்படி தற்கொலை செய்து கொண்டது தவறு என கூறியுள்ளார்.
ஒரு நடிகை அவரது லைஃப் பார்ட்னர் தான் இவரது கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கேள்வி எழுப்பும் வகையில் பதிவிட்டுள்ளார். மற்றொரு நடிகை இவருக்கு பணப் பிரச்சினை என கூறி வருகிறார்.
சித்ராவின் அம்மா தன் மகளின் காதலன் தான் அடித்து கொன்று இருக்கலாம் என கூறி வந்த நிலையில், தற்போது காவல்துறை மற்றும் மருத்துவர்கள் சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என திட்டவட்டமாக உறுதி செய்து விட்டனர்.

chithra
