fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சித்ராவின் தற்கொலையில் இருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டு வந்த சலீம்.. யார் இவர் தெரியுமா.?

vj-chitra

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித்ராவின் தற்கொலையில் இருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டு வந்த சலீம்.. யார் இவர் தெரியுமா.?

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்த வி ஜே சித்ரா கடந்த 9ஆம் தேதியன்று பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து இவரது தற்கொலையில் பல அடுக்கடுக்கான உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சித்ராவின் தந்தையாரும், தாயாரும் சித்ராவின் தற்கொலையில் பல மர்மங்கள் மறைக்கப்பட்டு உள்ளதாகவும் அதுமட்டுமில்லாமல் தீர விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சித்ராவின் தந்தையார் அளித்த புகாரின் பெயரில் நசரத்பேட்டை போலீசார் சித்ராவின் கணவரான ஹேமந்த் கைது செய்தனர். அதுமட்டுமில்லாமல் சித்ராவின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு முதல்வருக்கு சித்ராவின் தாயார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில் பிரபல ஊடகத்திற்கு போனில் மூலம் பேசிய சித்ராவின் உதவியாளரான சலீம் பல அடுக்கடுக்கான உண்மைகளை கூறியுள்ளார்.

மேலும் சலீம் உண்மையைப் பற்றி சொல்வதற்கு தயாராக இருக்கும் நிலையில் என்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை என்றும், நான் ஹேமந்த்க்கு ஆதரவாக பேசுவதாக நினைப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

chitra

chitra

சித்ராவிற்கு டிநகரில் ஒரு வீடு உள்ளதாகவும் இந்த வீடு சித்ராவின் பெற்றோருக்கும், ஹேமந்த் பெற்றோருக்கும் கூட தெரியாது எனவும். எனக்கும் சித்ராவிற்கு ஹேமந்த் மட்டுமே இந்த வீடு பற்றி தெரியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் சித்ரா, ஹேமந்த் ஓய்வு எடுப்பதாக இருந்தால் இந்த வீட்டில் தான் ஓய்வு எடுப்பார்கள். ஷூட்டிங் செல்லும்போது மட்டும் சித்ரா சென்று விடுவார் என கூறியுள்ளார். வீடு இருக்கும் போது ஏன் அவர்கள் ஹோட்டலில் தங்க வேண்டும் வேண்டுமென்றே திட்டம்போட்டு சித்ராவை கொலை செய்துள்ளனர் என பிரபல டிவி சேனல் முன் வைத்த கேள்விகளுக்கு போனில் பதில் அளித்துள்ளார். இவர் கூறியதை அடுத்து தற்போது சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top