fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முல்லைக்கு பதிலாக அச்சு அசல் அவரைப் போல் இருக்கும் பிரபலம்.. லீக்கான பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

chitra

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முல்லைக்கு பதிலாக அச்சு அசல் அவரைப் போல் இருக்கும் பிரபலம்.. லீக்கான பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

விஜய் டிவி சீரியல் மிகவும் பிரபலானது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலில் கதிர்,முல்லை கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதால் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்தது.

சில நாட்களுக்கு முன்பு கூட முல்லை கதாபாத்திரத்தில் சரண்யா நடிப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி சரண்யா நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை என தெளிவாக தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா என்னும் சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோரி சீரியலில் நடித்துவரும் ஸ்ரீவித்யா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சித்ராவிற்கு எந்த அளவிற்கு நீங்கள் ஆதரவு கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு காவியாவிற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் அச்சு அசலாக சித்ராவை போல இருக்கிறார். அதனால் இவர் தான் இந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் எனவும் பல தரப்பினரும் கூறிவருகின்றனர்.

kaviya

kaviya

மேலும் சித்ரா நடித்த சில காட்சிகள் டிசம்பர் 23ஆம் தேதி வரைக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அதன் பிறகு காவியா முல்லை கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்துவார் என தெரிகிறது.

kaviya-mullai

kaviya-mullai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top