சித்தூர் ராணி பத்மினி

“சித்தூர் ராணி பத்மினி” பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி  1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். உமா பிக்சர்ஸின் சார்பில்  ஆர்.எம். ராமநாதன் தயாரித்தார் . படத்தை சித்ராபு  நாராயணமூர்த்தி இயக்கினார். கதை, திரைக்கதையை ஸ்ரீதர் மற்றும் இளங்கோவன் இணைந்து எழுதினர்.

இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எம்.என். நம்பியார், டி.எஸ். பாலையா, கே.ஏ. தங்கவேலு, காகா ராதாகிருஷ்ணன்  மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

Padmavati – Chitoor Rani Padmini

ராஜஸ்தானின் ராணி பத்மினியின் கதை அந்தக்காலத்தில்  இந்தியா முழுவதும் பிரபலமான ஒன்று. அந்தக் கதையை தான் தமிழில்  படமாக  எடுத்தனர். பத்மாவத் என்ற கவிதை புத்தகம், செவி வழிச்செய்தி, மற்றும் கற்பனை கலந்து எடுக்கப்பட்ட படம் தான் இது.

பாலிவுட் பத்மாவதி

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர் நகர் பகுதியை   சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான்  இந்தப் படமும்  எடுக்கப்பட்டுள்ளது.

Padmavati

பத்மாவதியாகத் தீபிகா படுகோன். அவர் கணவர்  ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூர்.  அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் நடித்துள்ளனர்.

நம் தமிழில்  தீபிகா  கதாபாத்திரத்தில் வைஜெயந்திமாலா. ஷாஹித் கபூர் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன். ரன்வீர் சிங் கதாபாத்திரமான அலாவுதீன் கில்ஜியாக டி.எஸ். பாலையா. கில்ஜியின் விசுவாசி மாலீக்காபூர் கேரக்டரில் எம்.என்.நம்பியார் நடித்திருப்பார்.(மாலீக்காபூர் கதாபாத்திரம் தான் ராணியின் அழகை பற்றி அலாவுதீன் கில்ஜியிடம் விவரித்து சித்தூர் மேல் போர் தொடுக்க வைப்பார்.)

chittor rani padmini

தமிழில் சிறந்த நடிகர்கள், அற்புதமான நடனம், அசத்தலான செட் அமைப்பு, தரமான பின்னணி இசை என்று இருந்த பொழுதிலும் இப்படம் அன்று தோல்வியையே தழுவி உள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி எடுத்துள்ள பத்மாவதி படத்துக்கு நம் சித்தூர் ராணி பத்மினி’ படமும்  தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்பது தான் நிதர்சனமான உண்மை.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்:

இன்று போல்  சினிமாவை வைத்து  மத ரீதியான பாகுபாட்டை உருவாக்கும் தலைவர்களும் அன்று இல்லை என்பதால் இப்படம் சிறு சலசலப்பை கூட அன்று ஏற்படுத்தவில்லை.

Padmavati movie – Ghoomar Song

இந்நிலையில் இன்று  டெக்னாலஜி அதாங்க நம்ம பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸாப்ப், நியூஸ் சேனல்  போன்றவற்றை வைத்துக்கொண்டு சிலர் பண்ணும் அநாகரிக செயல்களால் எவ்வளவு விளைவுகள் ஏற்படுகின்றது என்று யோசிக்கும் பொழுது தான் வருங்காலத்தை நினைத்து பயம் ஏற்படுகின்றது.