Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹேமந்த்க்கு பின் விசாரணை வலையில் சிக்கும் முக்கிய பிரபலம்.. சித்ராவிற்கு நியாயம் கிடைக்குமா.?
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையில் பல சந்தேகங்கள் ஏற்பட்டதையடுத்து போலீசார் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
முதல் கட்டமாக சித்திராவின் தந்தையும், தாயாரிடமும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை முடிந்து வெளிவந்தபோது பத்திரிக்கையாளர்களிடம் சித்ராவின் தாயார் என் மகளின் தற்கொலைக்கு ஹேமந்த்தான் காரணம் என வெளிப்படையாக கூறி விட்டு சென்றார்.
அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சித்ராவின் கணவரான ஹேமந்த்திடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதனால் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அன்று இரவு ஹேமந்த்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

vj chitra
விசாரணையில் தான் ஹேமந்தக்கு பல விஐபிள் மகன்களுடனும் மற்றும் அரசியல் பிரமுகர்களின் மகன்களுடனும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசியல்வாதி மகன் ஒருவனுக்கு சித்ராவின் மீது ஈர்ப்பு உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதன் அடிப்படையில் போலீசார் ஹேமந்த்தின் நண்பர்களான விஐபி மகன்கள், அரசியல் பிரமுகர்களின் மகன்களுடன் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையில் தான் யார் அந்த பிரபலத்தின் மகன் என்பது தெரியும் என தெரிகிறது.
இந்த விசாரணையின் முடிவில் சித்ராவின் குடும்பத்திற்கு கண்டிப்பாக ஒரு நியாயம் கிடைக்கும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
