Tamil Nadu | தமிழ் நாடு
90’s கிட்ஸ்க்கு காத்திருக்கும் ஆச்சர்யம்.. சித்தி பார்ட் 2 வரப்போகிறது
ராடன் மீடியா மூலம் இருபது வருடங்களுக்கு முன்பு சித்தி என்ற பிரபலமான நாடகம் இயக்கப்பட்டது, இந்த நாடகத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். இதன்மூலம் நல்ல வரவேற்பை பெற்று சின்னத்திரையில் நடிகராக இடம் பிடித்துள்ளார்.
இரவு ஒன்பது மணி ஆனாலே இந்த சித்தி சீரியலின் டைட்டில் சாங் மிகவும் பிரபலமானது. இவை சித்தி சீரியல் ரசிகர்களுக்கும், 90கிட்ஸ்கும் மிகவும் பிடித்தமான பாடல்.
இந்த சீரியலில் நடிகை ராதிகா, சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்குப் பின் செல்வி, அண்ணாமலை, அரசி, மற்றும் வாணி ராணி என்று தொடர்ந்து சின்னத்திரையில் வெற்றி கண்டுள்ள நடிகை ராதிகா இப்பொழுது சித்தி பார்ட் 2 வில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் மிகவும் மும்முரமாக சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.
இதன் ப்ரோமோ தீபாவளி அன்று வெளியிடப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
