Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது சிரஞ்சீவி 152 பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்
தெலுங்குத் சினிமாவின் பிரதிபலிப்பாக இருப்பவர் சிரஞ்சீவி. சில வருடங்கள் அரசியல் பிரவேசத்துக்காகத் திரை துறையை விட்டு விலகியிருந்தார். பின்பு கட்சியைக் கலைத்துவிட்டு, தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்திய அளவில் ரீச் உள்ள நடிகர். இன்று (ஆகஸ்ட் 22) தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
சிரு 152 – கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் ‘ஆச்சாரியா’ படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இன்று இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மாலை 4 மணிக்கு வெளியானது.
மணிசர்மா இசை அமைக்கிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் நவீன் நூலி. நிரஞ்சன் ரெட்டி மற்றும் ராமச்சரன் இப்படத்தை தயாரிக்கின்றனர். திரிஷா வெளியேற காஜல் அகர்வால் ஹீரோயின் ஆக நடிக்கவுள்ளார். நக்சல் தலைவர் பற்றிய படம் இது.

aacharya FLP
இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது முதல் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.
