fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மெகா (மெர்சல்) ஸ்டார் சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி திரைவிமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

மெகா (மெர்சல்) ஸ்டார் சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி திரைவிமர்சனம்

சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிமாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் வைத்து ரெடியாகியுள்ளது. சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது ஆரம்பிப்பதற்கு சுமார் 10 வருடங்கள் முன்பு நடக்கும் கதைக்களமே இப்படம்.

கதை – அந்த காலத்து சூழல் மற்றும் அரசியல் பின்னணி பற்றிய சம்பவங்களுடன் துவங்குகிறது படம். நரசிம்ம ரெட்டி ரோலில் நிதானமாக என்ட்ரி கொடுக்கிறார் சிரஞ்சீவி. ஒருபுறம் குறும்பான காதலியான தமன்னா, மறுபுறம் பாலியத்தில் விவாகம் செய்து, இன்று வந்து நிற்கும் மனைவியாக நயன்தாரா. சிரஞ்சீவிக்கு பேரரசர்களின் ஆதரவு, கோபத்தில் இருக்கும் கிச்சா சுதீப், கிஸ்தி விதித்து விவசாயிகளை கொடுமை படுத்தும் பிரிட்டிஷ் என நகர்கிறது கதை. வில்லன் வெள்ளயனை ஜலசமாதி செய்து நரசிம்ம அவதாரம் போல கம்பீரமாக நிற்க வருகிறது இடைவேளை.

இரண்டாம் பாதியில் நட்பு, எதிரியின் கோபம், உடன் இருப்பவனின் துரோகம், காதல், தேசபக்தி என பல கட்டங்களாக நகர்கிறது கதை. எனினும் பிரிட்டிஷ் படைகளிடம் சிக்கி ஹீரோ என்ன ஆனார், சுதந்திரம் மோகம் எப்படி விதைக்கப்பட்டது என முடிகிறது படம்.

பிளஸ் சிரஞ்சீவி, டெக்கினிக்கல் டீம்

மைனஸ் சுமாரான எடிட்டிங், இரண்டாம் பாதி திரைக்கதை

சினிமாபேட்டை அலசல் – உண்மை கதை என்பதனை விட, இது சினிமாவிற்காக பிணையப்பட்ட கதை என்றே சொல்ல வேண்டும். எனினும் ஆந்திராவில் நடைபெற்ற புரட்சியை சினிமாதத்துடன் சேர்த்து சூப்பர் விருந்தாக படைத்துள்ள இயக்குனர் சுரேந்தர் ரெட்டிக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

நிறுத்தி நிதானமாக சென்ற முதல் பாதி அருமை. இரண்டாம் பாதியில் சில தங்கு தடைகள் வந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் தனி ஆளாக சிரஞ்சீவி நம்மை கவர்ந்து விடுகிறார்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – சிரஞ்சீவி ரசிகர்களுக்காக, சிரஞ்சீவி ரசிகர்களால் எடுக்கப்பட்டுள்ள படமே இந்த சைரா.

பல இடங்களில் பாகுபலியின் தாக்கம் போலவே இருப்பினும், இப்படம் சர்வதேச தரத்தில் உள்ளது என்பதே உண்மை. கட்டாயம் பம்பர் ஹிட், வசூல் வேட்டை தான் இப்படம்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3.25 /5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top