அறிமுக இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் ராணா-டாப்ஸி இணைந்து நடித்துள்ள படம் `காஸி’. 1971-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் பின்னணியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராணுவ அதிகாரியாக ராணா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மறைந்த பாலிவுட் பிரபலம் ஓம் பூரியும் நடித்துள்ளார்.

பிவிபி நிறுவனம், மேட்னி என்டர்டெயிண்மண்ட் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் தெலுங்கு, இந்தியில் தயாராகியுள்ளது. மேலும் இப்படம் தமிழிலும் டப் செய்யப்படுகிறது.

இதற்காக இந்தி படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், `காஸி’ படத்தின் தெலுங்கு பதிப்பில் முக்கிய கதாபாத்திரத்துக்கு சிரஞ்சீவியும், தமிழ் டப்பிங்கில் சூர்யாவும் குரல் கொடுக்க உள்ளனர்.

மேலும் கடந்த வாரத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை பிப்ரவரி 17-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.