fbpx
Connect with us

சாகும் நேரத்தில் கூட தளபதி விஜய் பாடலுக்கு டிக்டாக் செய்த சிரஞ்சீவி.. கண்கலங்க வைக்கும் வீடியோ

siranjeevi-sarja-tiktok

Videos | வீடியோக்கள்

சாகும் நேரத்தில் கூட தளபதி விஜய் பாடலுக்கு டிக்டாக் செய்த சிரஞ்சீவி.. கண்கலங்க வைக்கும் வீடியோ

தமிழில் ஜெர்ரி,காதல் சொல்ல வந்தேன்,உயர்திரு 420,கள்ள சிரிப்பழகா போன்ற படங்களில் நடித்த மேக்னா ராஜ் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக கன்னட நடிகர் சிரஞ்சீவி என்பவருடன் காதலில் இருந்தார்.

பிறகு 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மேக்னாராஜ் தற்போது உடல் எடையை குறைத்து மெல்லிய இடையுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

திருமணமாகி தற்போது நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி இதுவரை 20 படங்களில் நடித்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

ராஜ மார்த்தாண்ட, ஏப்ரல், ரணம் ஆகிய படங்கள் படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சன் கிங் அர்ஜுனின் நெருங்கிய சொந்தக்காரர்.

இவரின் பிரிவு அவரின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இறப்பதற்கு முன்னதாக தளபதி பாடலுக்கு டிக் டாக் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=rwHc6-6zHfs&t=28s

Continue Reading
To Top