Videos | வீடியோக்கள்
கொல மாஸாக வெளியான சிரஞ்சீவியின் ஆச்சாரியா பட டீசர்.. பக்கா கமர்சியல்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி, சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்ததில் இருந்து அவரது படங்கள் பெரிய அளவில் வசூல் செய்து வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக ஆச்சாரியா(Acharya) என்ற படம் உருவாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகராக வலம் வந்தவர் சிரஞ்சீவி. ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி முழுவதும் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் சினிமாவில் கிடைத்த வெற்றிகள் அரசியலில் அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் உடனடியாக தன்னுடைய கட்சியை கலைத்து விட்டு சிலகாலம் ஓய்வு எடுத்தார். பின்னர் தளபதி விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன கைதி நம்பர் 150 என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
ரீ என்ட்ரி கொடுத்த முதல் படமே 150 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. அதனைத் தொடர்ந்து வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படம் 200 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் எதிர்பார்த்த லாபம் இல்லையாம்.
இந்நிலையில் விட்டதை பிடித்து விடவேண்டும் என தெலுங்கு சினிமாவில் மாஸ் கமர்சியல் இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சாரியா என்ற படம் உருவாகி வருகிறது.
ஆச்சாரியா படத்தின் டீசர் இன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை சிரஞ்சீவி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றன. மேலும் படத்தின் டீசரை பார்க்கும்போது பக்கா கமர்ஷியல் படம் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.
