மைக்கேல் ஜாக்சனுக்கே டஃப் கொடுக்கும் சிரஞ்சீவி! உலக சாதனை படைத்த மெகா ஸ்டார்!

சினிமாவில் ஏராளமான நடன அசைவுகளை வெளிக்காட்டியதற்காக சிரஞ்சீவிக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இது டோலிவுட் திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை சிரஞ்சீவி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி தெலுங்கில் மெகா ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. கொன்னிதெல சிவ சங்கராவர பிரசாத் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு மெட்ராஸுக்கு வந்தார். பல முயற்சிகளுக்குப் பின் அவருக்கு ‘புனாரல்லு’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த சிரஞ்சீவி தொடர்ந்து, சிந்தூரம்,சுத்ரவீணை, ஸ்டாலின், ஷங்கர் தாதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ராணுவ வீரன், மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் சிரஞ்சீவி நடித்திருந்தார். இப்படங்கள் மூலம் அவர் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அவரது நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் உடல் அசைவுகள், நடன அசைவுகளுக்கு என தனி ரசிகர்கள் உருவாகினர்.

சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாஸ் காட்டி வரும் சிரஞ்சீவி இதுவரை தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளார். இதில் கேங் லீடர், தாகூர் உள்ளிட்ட பல படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைத்தனர். இவர், வசூல் சக்கரவர்த்தியாக மட்டுமில்லாமல், நந்தி விருதுகள், 9 பிலிம்பேர் விருதுகள், உயரிய விருதான பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் மதிப்பிற்குரியவராகத் திகழும் சிரஞ்சீவி, இதுவரை தன் 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், 156 படங்களில் இடம்பெற்ற 537 பாடல்களுக்கு 24,000க்கும் மேற்பட்ட நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். இதைப் பெருமைப்படுத்தும் வகையில், அவருக்கு கின்னஸ் விருது வழக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, இன்று ஹைதராபாத்தில் நடந்தது.

இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் பங்கேற்றதுடன், ‘தன் படத்தில் கஷ்டமான நடனக் காட்சிகளிலும்கூட சிரஞ்சீவி சார் மகிழ்சியுடன் ஆடி நடிப்பார்’ என்று கூறி அவருக்குச் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வயதிலும் டான்ஸில் தனி ஸ்டைலுடன் சினிமாவில் அசத்தி வரும் சிரஞ்சீவிக்கு சினிமாவின் நடனத்திற்கான கின்னஸ் விருது வழங்கப்பட்டதற்கு, திரையுலகினர் பலரும் ‘மைக்கேல் ஜாக்சனுக்கே நம்ம சிரஞ்சீவி சார் டஃப் கொடுப்பாரு போலயே’ எனப் பாராட்டிப் பேசி வருகின்றனர்.

MegaStar Chiranjeevi
MegaStar Chiranjeevi
- Advertisement -spot_img

Trending News