Connect with us
Cinemapettai

Cinemapettai

chiranjeevi-niharika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தம்பி மகளுக்கு கோடி கோடியாக அள்ளிக் கொடுத்த சிரஞ்சீவி.. மலைக்க வைக்கும் கல்யாண சீர்வரிசை

தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவருக்கு தமிழ் சினிமாவிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி, கைதி 150 போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

சினிமாவில் நடிகராக இருந்த போதே தேவையில்லாமல் அரசியலில் ஈடுபட்டு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பின்னர் சிரஞ்சீவி அரசியலில் பெரிய அளவு சோபிக்க முடியாததால் தற்போது மீண்டும் பழையபடி ஹீரோவாக வந்துவிட்டார்.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை சிரஞ்சீவி விட்டு சென்ற இடம் அப்படியேதான் இருந்தது. பின்னர் திரும்ப வந்து அவரே அந்த இடத்தை நிரப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்த சிரஞ்சீவியின் படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வசூல் செய்தன.

அதுமட்டுமில்லாமல் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் சினிமாவில் நடித்து வருகிறார். பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான நாகபாபு என்பவரின் மகள் பிரபல நடிகை நிஹாரிகா என்பவருக்கு ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனை மாளிகையில் திருமண விழா நடைபெற்று வருகிறது.

அந்த திருமணத்தில் கலந்து கொண்ட சிரஞ்சீவி தனது தம்பி மகளுக்கு 1.5 கோடி நகை ஆபரணங்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளாராம். அது மட்டுமில்லாமல் பல லட்சம் மதிப்பிலான இதர சீர்வரிசைகளை கொடுத்து அசத்தி விட்டாராம்.

chiranjeevi-at-niharika-wedding

chiranjeevi-at-niharika-wedding

என்னதான் நாகபாபு மகளாக இருந்தாலும் சிரஞ்சீவி நிகாரிகாவை சொந்த மகள் போலவே வளர்ததால் அவருக்கு மனதார சீர் வரிசைகளை அள்ளி குவித்து வருகிறாராம். சிரஞ்சீவி அடுத்ததாக கொரடலா சிவா இயக்கத்தில் ஆச்சாரியா எனும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

Continue Reading
To Top