fbpx
Connect with us

Cinemapettai

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி திடீர் கைது

News | செய்திகள்

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி திடீர் கைது

chiranjeeviபிரபல தெலுங்கு நடிகரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான சிரஞ்சீவி இன்று ராஜமுந்திரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய கைதை கண்டித்து சிரஞ்சீவி ரசிகர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்கள் இனத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காபு சமூக தலைவர் பத்மநாபம் என்பவர் தனது மனைவியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருடைய உண்ணாவிரதம் நான்காவது நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில் அதே இனத்தை சேர்ந்த நடிகர் சிரஞ்சீவி இன்று அவரை சந்திக்க திட்டமிட்டார்.

பத்மநாபம்-சிரஞ்சீவி சந்திப்பை தடுக்க முடிவு செய்த ஆந்திர அரசு, ராஜமுந்திரி விமான நிலையத்திற்கு சிரஞ்சீவி வந்தபோது அவரை தடுத்து கைது செய்தது. அவருடன் வந்த காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். சிரஞ்சீவி கைதால் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top