Tamil Nadu | தமிழ் நாடு
வேற லெவல் சாதனை படைத்த சின்னி ஜெயந்தின் மகன்.. குவியுது பாராட்டு தெறிக்குது இணையதளம்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் என பன்முகம் இடையவர் சின்னி ஜெயந்த். இவர் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த “கை கொடுக்கும் கை” என்ற படத்தின் வாயிலாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கல்லூரி மாணவராகவே நடித்து அசத்தியவர். இவர் 300க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார். சினிமா மட்டுமன்றி டிவியிலும் ஒரு கலக்கு கலக்கியவர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவுகளை யு.பி.எஸ்.சி சமீபத்தில் வெளியானது.
இத்தேர்வில் தமிழகத்தில் இருந்து பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சின்னி ஜெயந்த்தின் மகனும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஸ்ருஜன் ஜெய், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 75-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

chinni jayanth with his son
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும், கமலும் தொலைபேசி வாயிலாக சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஸ்ருஜன், தனது பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக தானும் பெருமைப்படுவதாக கூறியுள்ள ரஜினி, கொரோனா ஊரடங்கு இல்லாமல் இருந்தால் நேரடியாக வீட்டுக்கே வந்து வாழ்த்தியிருப்பேன் எனவும் தெரிவித்தாராம்.
