Connect with us

Cinemapettai

மீண்டும் #Metoo.. டாக்டர் பட்டத்தை சேர்த்து இதையும் குடுங்க.. ட்விட்டரை அலறவிட்ட சின்மயி

vairamuthu-chinmaye

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் #Metoo.. டாக்டர் பட்டத்தை சேர்த்து இதையும் குடுங்க.. ட்விட்டரை அலறவிட்ட சின்மயி

பிரபல பாடகியான சின்மயி #Metoo பிரச்சினையில் கவிஞர் வைரமுத்துவை தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என்று வெளிப்படையாக தெரிவித்தார். அந்த பேட்டியில் சுவிட்சர்லாந்தில் கலை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது தனக்காக ஒரு தனி அறையில் காத்து இருந்ததாகவும், அங்கு நீங்கள் செய்த செயல் என்னவென்று உங்களுக்கே தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற குற்றச்சாட்டு கோலிவுட் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பல பெண்கள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று ஆதங்கபட்டுள்ளாரம். ஆனால் டப்பிங் யூனிட்டில் இருந்து தன்னுடைய வேலை பறிபோனது தான் கொடுமையான விஷயம் என்று கூறியுள்ளார்.

chinmayi-01

chinmayi-01

ஏதேனும் நிகழ்ச்சிக்கு வைரமுத்துவை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் சின்மயி உடனே டுவிட்டர் பக்கத்தில் அவரை வசைபாடுவதை வேலையாக வைத்துள்ளார்.

ஒன்பது பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் வைரமுத்துவின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாக டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக SRM பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது. இதனை பார்த்து கொந்தளித்த சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபோன்று சமூக ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த பதிவில் அவர் கூறுகையில் மொழியின் புலமைக்காக தான் இந்த டாக்டர் பட்டம் கொடுக்கிறீர்கள் என்று தெரியும், ஆனால் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கு சேர்த்து பட்டம் கொடுங்கள் என்று வெளியிட்டுள்ள பதிவு கோலிவுட் தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வளவு புகார்களை விசாரிப்பதற்கு கூட யாரும் தயாராக இல்லை, இதனால் மறுபடியும் #MeToo பிரச்சினையை சின்மாயி கிளப்பியுள்ளார் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. இதைப் பற்றி வைரமுத்து தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதால் அவர் மீது தெரிவித்துள்ள இந்த புகார் உண்மையாக இருக்கலாமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது  என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் இதுபோன்ற விமர்சனங்களை நம்புவதா இல்லையா என்று ரசிகர்கள் தலைசுத்தி நிற்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top