Tamil Cinema News | சினிமா செய்திகள்
சின்மயி போட்ட ஒரு ட்வீட் கொந்தளிக்கும் சிம்பு ரசிகர்கள்.! வெடித்த பிரச்சனை

ட்விட்டரில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருவது Metoo விஷயம்தான், இதில் வைரமுத்து, ராதா ரவி, தியாகராஜன், அர்ஜுன் உட்பட பலர் சிக்கிக் கொண்டார்கள், இந்த விவகாரம் எப்பொழுது முடிவுக்கு வரும் என தெரியவில்லை இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இதில் லேட்டஸ்டாக லேகா வாஷிங்டன் கெட்டவன் என மறைமுகமாக சிம்புவை தாக்கியுள்ளார் இது சிம்பு ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. அதனால் அவரது பதிவுகள் தாறுமாறாக திட்டி வருகிறார்கள் சிம்பு ரசிகர்கள்.
இந்த நிலையில் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் லேகா வாஷிங்டன் வெற்றியடைந்த விருதுகளையும் டிசைனர் அவருடைய கம்பெனி மிகவும் வெற்றிகரமாக நடக்கிறது அவரைப் பார்த்து ரசிகர்கள் தோல்வி அடைந்தவர் எனக் கூறுவது எனக்கு சிரிப்பை வரவழைத்ததுள்ளது என டிவிட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார், மேலும் லேகா வாஷிங்டனுக்கு ஆதரவு தெரிவித்து சின்மயி போட்ட ட்வீட் சிம்பு ரசிகர்களிடம் கோவத்தை உண்டாக்கியுள்ளது இதனால் சின்மயியை சிம்பு ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள் ட்விட்டரில்.
