Tamil Cinema News | சினிமா செய்திகள்
புடவை அணிந்தாலும், என்னை வேறு விதமாக போட்டோ எடுத்து – சின்மயி பகிர்ந்த தகவல்.
மீ டூ
பாடகி சின்மயி தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பல பிரச்சனைகளை தாண்டி வந்ததாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று. கோலிவுட் வட்டாரங்களில் இப்போது சர்ச்சை ராணியாக சின்மயி மாறிவிட்டார். மேலும் அவர் வழக்கும் போடவில்லை, ஏன் என்று கேள்வி கேட்டால் காரணமும் தெரியவில்லை. இதோடு அந்த விஷயத்தையும் மறந்துவிட்டார்கள் மீடியாவும், பெண்ணியம் பேசுபவர்களும்.
எனினும் ட்விட்டரில் யாரேனும் இன்றளவும் எதாவது கேட்டு சீண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் பல முறை இன்றும் வக்கிரமாக, கீழ்த்தரமாக மற்றும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி தினமும் மெஸேஜ், மெயில் , கமெண்ட் அனுப்புவதாகவும் முன்பே கூறியிருந்தார்.

chinmayi-issue
இந்நிலையில் ட்விட்டரில் “நீங்கள் நன்றாக படுகிறீர்கள். அழகாக, தைரியமாக, தன்னம்பிக்கையுடன் அடுத்தவருக்கு ரோல் மாடல் போல் உள்ளவர். இத்தகைய தன்மை உடைய நீங்கள் சேலையில் அல்லது இந்திய பாரம்பரிய உடை அணிந்தால் நன்றாக இருக்குமே. இளம் பெண்கள் இந்தியத்தன்மையோடு பாசிட்டிவாக போகலாமே” என அவரை டாக் செய்து கேட்டிருந்தார்.
@Chinmayi – you sing really well ; bold, beautiful, supremely confident & therefore a role model. But how nice it would be if only you present all these characteristics clad in a saree or any Indian dress. Young girls should associate positive, good characteristics w/ indianness.
— Ram Kumar (@geminiram) January 28, 2019
அதற்கு தான் சின்மயி இந்த அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார். “புடவை அணிந்தாலும் சில ஆண்கள் இடுப்பு மற்றும் மார்புப் பகுதிகளை போட்டோ எடுத்து, ஆபாச இணையதளங்களில் அப்லோட், அட்டஹனை பார்த்து தான் எவ்வாறு சுயஇன்பம் அனுபவித்ததாகவும் மெஸேஜ் அனுப்புகின்றனர். நான் சேலை மற்றும் ஜீன்ஸ் இரண்டிலுமே இந்தியனாக இருக்க முடியும்.” என்று பதில் தந்தார்.
When I wear a sari there are groups of men who take photographs of my waist + side of my chest, circle it and upload it on soft porn websites. And then I get messages on how they are masturbating to it.
I can be Indian in a sari and in jeans, Sir. https://t.co/94Ctcsa361
— Chinmayi Sripaada (@Chinmayi) January 28, 2019
உடனே இதற்கும் பலர் செடேகூடமாக கமெண்ட் பதிவிட, இறுதியாக மீண்டும் அந்த நபர் எனக்கு முன்பே தெரிந்தவர். ஏற்கனவே உடை பற்றி என்னிடம் நேரிலும் பேசினார்.
BTW it is an FYI some of the people I respond to are people I know.
This gentleman met me
In person and advised the same thing a couple of months ago about wearing only a
Sari when I go out in public.The people I respond to aren’t random 🙂 Just saying.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 28, 2019
அதுமட்டுமன்றி நமக்குள் கருத்து வேறுபடலாம் ஆனால் கீழ்த்தரமாக பேசக்கூடாது எனவும் சொல்லியுள்ளார்.
I request for one thing on those who support me on my Timeline. With those I / We disagree, we shall not name call.
Debate on the issue, opinion or mindset.
I can’t ask for dignity in debate and then be quiet when it is convenient for me on my TL. Thank you and much ❤️❤️— Chinmayi Sripaada (@Chinmayi) January 28, 2019
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
