fbpx
Connect with us

Cinemapettai

தலைமை நீதிபதியை எதிர்த்து சின்மயி போராட்டம்.. அனுமதி மறுப்புக்கு என்ன காரணம்?

Tamil Nadu | தமிழ் நாடு

தலைமை நீதிபதியை எதிர்த்து சின்மயி போராட்டம்.. அனுமதி மறுப்புக்கு என்ன காரணம்?

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை தெரிவித்தார். அந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தது.

இதை கண்டித்து பல பெண்களும் போராட்டம் நடத்துகின்றனர்.  நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தலைமை நீதிபதியின் மீது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

தற்போது பாடகி சின்மயி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மே 12ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தார். அதற்காக அவர் போலீஸ் அதிகாரியிடம் சென்று போராட்டம் நடத்த உத்தரவைக் கேட்டு இருந்தார்.

ஆனால் போலீசார் நீதிமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதால் அவர்களுக்கு அனுமதி தரவில்லை, இதை கண்டித்து பலரும் இதை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top