Tamil Cinema News | சினிமா செய்திகள்
சின்மயிக்கு பலாத்கார மிரட்டல்.. அடங்காத கோபம்
சின்மயிக்கு பலாத்கார மிரட்டல்..
சினிமாத்துறையில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை வெளியே கொண்டு வருவதற்காக #Metoo என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதில் முக்கியமாக சின்மயி மற்றும் வைரமுத்துவின் பாலியல் பிரச்சினைகள் சில நாட்களாக விவாதத்துக்கு உள்ளானது. இந்த பிரச்சனையால் சின்மயி சினிமா டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

vairamuthu-chinmayi
இந்தப் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்த சின்மயி செய்தியாளர்கள் சந்திப்பின்போது பல கேள்விகளுக்கு பதிலளிக்க தயங்கினார். இதனையடுத்து அவர் பலவிதமான தப்பான விமர்சனங்கள் தன்னைப்பற்றி வருவதாக கூறி வருத்தம் தெரிவித்தார். அதிலும் ஒரு மோசமான தன்னைப் பற்றி கூறியதை அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் ஒரு நபர் மோசமாக என்னை திட்டியது மட்டுமில்லாமல் கற்பழித்து கொலை செய்யப்பட வேண்டும் என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் அதனை இங்கு பதிவிட நாம் விரும்பவில்லை. இது மிகப்பெரிய மோசமான வன்கொடுமைக்கு எதிரான செயல் என்றே கூறலாம்.
இதுபோன்ற செயல்களை தவிர்த்தால் மட்டுமே உண்மையான பாலியல் ரீதியான பிரச்சனைகள் தைரியமாக பெண்கள் வெளிகொண்டுவர முடியும். அவர் கூறுவது உண்மையா பொய்யா என்பதை நீதிமன்ற பார்த்துக் கொள்ளக் கூடிய ஒரு விஷயம். பதில் சொல்கிறேன் என்ற பெயரில் மற்றவர்களை அவமானப்படுத்துவதும் அசிங்கப்படுத்துவது நாகரீகமற்ற செயல் என்பதே இங்கே பதிவிடுகிறோம்.
