Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல கிரிக்கெட் வீரர் இவ்வளவு மோசமாக நடந்துகொண்டாரா அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பாடகி சின்மயி.!
சினிமாவில் பல நடிகைகள் தற்போது பாலியல் பிரச்சனைகளை தைரியமாக பேசி வருகிறார்கள், இதற்கு முன்பு தெலுங்கு நடிகர் ஸ்ரீ ரெட்டி தனக்கு நடந்த பாலியல் பிரச்சனைகளை தைரியமாக வெளியிட்டார், அந்த list பாடகி சின்மயி சமீபகாலமாக தனக்கு நேர்ந்த பாலியல் பிரச்சனைகளை மிக தைரியமாக வெளியே கூறி வருகிறார்.
முதலில் வைரமுத்து பற்றி பேசியது தான் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதற்கு எல்லாரும் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் கல்யாண், பாடகர் கார்த்திக் ஆகியோர்கள் இந்த பாலியல் பிரச்சினைகள் சிக்கினார்கள், மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியை பாடகி சின்மயி வெளியிட்டுள்ளார் இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cricketer Lasith Malinga. pic.twitter.com/Y1lhbF5VSK
— Chinmayi Sripaada (@Chinmayi) October 11, 2018
