மீ டூ

பாடகி சின்மயி தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பல பிரச்சனைகளை தாண்டி வந்ததாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று. கோலிவுட் வட்டாரங்களில் இப்போது சர்ச்சை ராணியாக சின்மயி மாறிவிட்டார்.

வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து சர்ச்சை போய்க்கொண்டிருந்தது. சின்மயியும் டப்பிங் யூனியனிலிருந்து முன்னறிவிப்பில்லாமல் நீக்கப்பட்டார். மேலும் அவர் வழக்கும் போடவில்லை, ஏன் என்று கேள்வி கேட்டால் காரணமும் தெரியவில்லை. இதோடு அந்த விஷயத்தையும் மறந்துவிட்டார்கள் மீடியாவும், பெண்ணியம் பேசுபவர்களும்.

இந்நிலையில் தினமும் தான் சந்திக்கும் ஒரு சங்கடத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சின்மயி. மிகவும் வக்கிரமாக, கீழ்த்தரமாக மற்றும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சுமார் ஐந்து நபர்களாவது தினமும் மெஸேஜ், மெயில் , கமெண்ட் அனுப்புவதாக சகிரீன் ஷாட் இணைத்துள்ளார். இதுபோன்றவற்றை பற்றி இப்பொழுது நான் கண்டுகொள்வதில்லை எனவும் சொல்லியுள்ளார்.

இந்த ஸ்டேட்டஸை பார்த்த பலர் ஆதங்கத்துடன் சின்மயிக்கு தங்கள் ஆதரவை சொல்லி வருகின்றனர்.

இந்த மாதிரி சமயத்தில்  மனைவியின் பக்கம் ஆறுதலாக கணவர் உள்ளார் என்பதை அறியும் பொழுது சற்றே ஆறுதலாக உள்ளது.

அதிகம் படித்தவை:  அப்போதே நான் பேசியிருந்தால், என் நியாயத்தை நம்பியிருப்பார்கள்: கதறும் வனிதா விஜயகுமார்