chinmayi-vairamuthu

சுசித்ராவின் தனுஷ் புகாரில் தொடங்கி சின்மயி வரை இன்னும் தொடர்ந்து வருகிறது பிரபலங்களின் மீதான புகார்கள். இதற்கு ஒரு முடிவே இல்லையா? போட்டோக்கள் வீடியோக்கள் வெளியானால் ரசிகர்களுக்கும் ஒரு குஷியாக இருக்கிறது.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் சின்மயி தைரியமாக துணிந்து ஒரு பிரபலத்தின் மீது புகார் அளிப்பது ஆச்சரியமாக உள்ளது. இப்பொழுது இப்படி சொல்வதினால் என்ன பயன் என்று தெரியவில்லை. அவர் தவறு செய்திருந்தால் போட்டோ அல்லது வீடியோ ஏதேனும் ஒன்றை எடுத்து ஆதாரத்துடன் வெளியிட்டால் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பேசிய சின்மயி வைரமுத்துவால் எனக்கும் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது நான் இதனை உணர்ந்தேன். மிகுந்த பயம் என்னை ஆட்கொண்டது. பின் வைரமுத்துவுடன் இருப்பதை நான் தவிர்த்தேன். என்னை அவரது ஹோட்டல் அறைக்கு அழைத்தார். ஆனால் நான் மறுத்து விட்டேன். அவரது அலுவலக அறையில் இரண்டு பெண்களை அவர் முத்தமிட முயற்சித்திருக்கிறார்.

மேலும் அதிர்ச்சிகரமான சம்பவத்தையும் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

Vairamuthu“2005 அல்லது 2006ஆம் ஆண்டாக இருக்கும். ’வீழ மாட்டோம்’ என்ற ஆல்பம் ஒன்றை இலங்கை தமிழர்களுக்கு மாணிக்க விநாயகம் அவர்களுடன் பாடுவதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். அது புத்தகமா அல்லது பாடல் வெளியீடா என்று தெரியவில்லை. ஆனால், அதன் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தோம். இங்கு பாடல் ரெகார்டிங் முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்து சென்று லைவ்வாகப் பாடியும் கொடுத்தேன். எல்லோரும் கிளம்பிய பிறகும், நானும் என் அம்மாவும் மட்டும் அங்கேயே இருக்க வேண்டும் எனச் சொன்னார்கள்.

அதிகம் படித்தவை:  கல்லூரியில் சிறந்த பேச்சாளராக விளங்கிய கவிப்பேரரசு வைரமுத்து கடந்து வந்த பயணங்கள்

விழா ஏற்பாட்டாளர் வந்து, ‘நீங்கள் மட்டும் வைரமுத்துவை அவர் Lucerne பகுதியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று பார்க்கச் சொன்னார். நான் ஏன் என்று கேட்டதற்கு, கொஞ்சம் ஒத்துழையுங்கள் என்று சொன்னார். நான் மறுத்துவிட்டு, இந்தியாவுக்கு உடனே செல்ல ஏற்பாடு செய்யச் சொன்னேன். எனது எதிர்காலமே பாதிக்கப்படும் என்று அவர் சொன்னார். அதற்கு, நானும் என் அம்மாவும் எழுந்து நின்று எதிர்காலமும் வேண்டாம்; ஒரு மண்ணும் வேண்டாம் என்று சொல்லி, எந்த விமானம் சீக்கிரமாக இருக்கிறதோ, அதிலேயே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இந்தியா வந்தடைந்தோம் என்றார்.

அதிகம் படித்தவை:  ரஜினி அரசியலில் ஜெயிக்க இந்த மூன்று பிரிச்சனைகளை சமாளிக்க வேண்டும்- கவிப்பேரரசு வைரமுத்து.
Chinmayi

சின்மயி அளித்த வைரமுத்து கூறுவதாவது:

‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.’

சின்மயி இதற்கு பொய் சொல்றவன் என்று சிம்பிளாக பதில் அளித்து முடித்துவிட்டார்.

ஆனால் வைரமுத்து தரப்போ ‘ ஆண்டாள் பிரச்சினையில் தொடங்கி வைரமுத்துவை குறிவைத்து தாக்க முயற்சி செய்து வருகின்றனர். சுசித்ரா, ஸ்ரீரெட்டி, சின்மயி போன்றவர்கள் தங்களைப் பிரபலப்படுத்தி கொள்ள இப்படியொரு செய்தியை வெளியிட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர். சின்மயி பின்னால் ஒரு பிரபல அரசியல் கட்சி இயங்கிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.