fbpx
Connect with us

Cinemapettai

வைரமுத்துவிற்கு பெருகும் ஆதரவு! காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்

chinmayi-vairamuthu

News | செய்திகள்

வைரமுத்துவிற்கு பெருகும் ஆதரவு! காற்றில் பறக்கும் சின்மயி குற்றச்சாட்டுகள்

அமெரிக்க நடிகை Alyssa milano ஆரம்பித்து வைத்த இந்த #Metoo பிரச்சினை இந்தியாவில் பாலிவுட்டில் தொடங்கி தமிழ் சினிமா வரை நீண்டு கொண்டே செல்கிறது இந்தப் பிரச்சினைகளால் அவர்களும் பிரபலம் அடைந்து வருகிறார்கள். இந்தியாவில் தமிழ் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க இந்த பிரச்சினை இப்பொழுது எதற்காக கிளப்பப்பட்டு வருகிறது. எதை மறைக்க இந்தப் பிரச்சினை இப்பொழுது வருகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

14 வருடங்களுக்கு முன்பு நடந்த பிரச்சினை இப்பொழுது தூசி தட்டி எழுப்பப் படுகிறது. இந்த 14 வருடங்களில் சின்மயி 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் பணங்களையும் சம்பாதித்து விட்டார். இனிமேல் இந்த பிரச்சினையை கிளப்ப என்ன நோக்கம். வைரமுத்துவிற்கு அவமானமே தேடித் தரவேண்டும் என்பது நோக்கமா? அல்லது அவருக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்பது அவரது நோக்கமா?.

இந்நிலையில் பலர் வைரமுத்துவிற்கு ஆதரவாக இப்பொழுது பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து வைரமுத்து கூறுகையில் என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. அவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. புகார் தெரிவித்தவர்கள் வழக்கு தொடுத்தால் சந்திக்கிறேன் என்று வீடியோவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விஜய் மில்டன் கூறுகையில்’ கவிஞர் வைரமுத்து அவர்கள்
வெறும் கவிஞரல்ல
வெறும் கலைஞரல்ல
தமிழ்நாட்டின் பல அடையாளங்களில்
அவரும் ஒருவர் ,
பல தேசிய விருதுகள் பெற்று
நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்!
பல காவியங்கள் படைத்து
நம் தமிழ்மொழிக்கு சிறப்பு சேர்த்தவர் !
இன்று
பாடகி திருமதி . சின்மயி அவர்களால்
பாலியல் பழி சுமத்தப்பட்டிருக்கிறார்.
சின்மயி வார்த்தைகளில்
உண்மை இருக்கலாம்
உண்மை இல்லாமலும் இருக்கலாம்!
சின்மயி சொன்ன வார்த்தைகளை மட்டும்
வைத்துக்கொண்டு
இன்று ஊடகங்களும் , பத்திரிக்கைகளும்
வலைதளங்களும்
விவாதமேடை, பட்டிமன்றம், கருத்தரங்கம் என்று
வைரமுத்து அவர்களின் புகழை
நாரடித்துக்கொண்டிருக்கிறது!
ஒருவேளை பின்னாளில் சின்மயி வார்த்தைகள்
பொய்யாய் இருக்கும் பட்சத்தில்
ஒருவரின் புகழை போட்டிபோட்டுக்கொண்டு
வெட்டி கூறு போட்டவர்கள்
பொறுப்பேற்ப்பார்களா???
ஆதாரமில்லாத குற்றச்சாட்டிற்கு ஏன்
இவ்வளவு அவசரமாக ஆதரவு பரபரப்பு ???
சின்மயி குரல் குடுப்பது அவர் உரிமை
அதை தவறென்று சொல்லவில்லை !
ஆனால் தமிழோடு தமிழாய் வாழ்ந்தவனை
தமிழ்க் குரல்கள் தகர்த்துக்கொண்டிருக்கிறது!
தமிழர்களே தமிழ்க்காக வாழ்பவனை
ஏன்டா தமிழனாய் பிறந்தோம் என்று
நினைக்க வைத்துவிடாதீர்கள்!
ஒருவேளை வைரமுத்து அவர்களின் பக்கம்
நியாயம் இருந்தால் அந்த தமிழனின் சாபம்
நம்மை சும்மா விடாது !
இந்த விஷயத்தில் பொறுமை தேவை என்பதே
என் எண்ணம் !
காய்த்த மரம் கல்லடிபடத்தான் செய்யும்,
ஆனால் இங்கே கல்லடிபடுவது தமிழ்மரம்!
தமிழா பொறுமை காப்போம் !
நியாயம் எதுவோ அது வெல்லட்டும்
* பேரரசு *

குற்றம் சொல்லப்படும் சுவிசர்லாந்தில் அந்த நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறுகையில் சின்மயி கூறுவது அப்பட்டமான பொய் வைரமுத்து அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை எனவும், சின்மயி அவரது தாயாருடன் என் வீட்டில் தான் தங்கினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்“ என கூறியிருந்தார். அவர் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை எனக் கூறினார்.

இதற்கு முன் சுசி லீக் பிரச்சினை வெளிவரும்போது சின்மயி கூறியது ’சுசித்ரா மன நலம் சரியில்லாமல் இருக்கிறார் அதனால்தான் பேசுகிறார் என கூறினார். இப்பொழுது இவர் எப்படி பேசுவது ஏன் என பொதுவானவர்கள் கேள்வி கேட்கின்றனர்.

மேலும் இந்த பிரச்சினையில் வேறு எந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அந்தளவிற்கு பேசாமல் இருக்க பாஜகவினர் மட்டும் குரல் கொடுத்து வருவது ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறது ஏற்கனவே ஆண்டாள் பிரச்சினையில் சிக்கி வெறுமனே பழிவாங்கவே இப்படி ஒரு குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்படுகிறது என சீமான் முதல் பலரின் கருத்தாக இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top