‘மாமி என கூப்பிட்டாள் மரியாதை கெட்டுவிடும்’ என மீண்டும் இணையத்தில் கடும் வாக்குவாதமிடம் சின்மயி!

தென்னிந்திய சினிமா உலகில் முக்கிய பின்னணி பாடகியாக திகழ்பவர் தான் நடிகை சின்மயி. ஒரு காலத்தில் சின்மயின் குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது, சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக சின்மயின் பெயர் பெரும் டேமேஜ் ஆனது. மேலும்  இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த நிலையில், சின்மயி வைரமுத்துவின் மீது குற்றச்சாட்டை வைத்ததால், அவர் டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியை இழந்துள்ளார்.

அதன்பின்பு மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து வைரமுத்து நீக்கப்பட்டதை, சமூகவலைதளங்களில் சின்மயி தனக்கு நியாயம் கிடைத்துவிட்டதாக பெரும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில் நெட்டிசன்கள் சின்மயியை கேலி செய்யும் மீம்ஸ் ஒன்றை உருவாக்கி அதில் சின்மயியை மாமி என குறிப்பிட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சின்மயி, ‘ஜாதியை ஒழிக்கும் அவங்களே, ஜாதி வெறி புடிச்ச மாமாஸ்.

chinmayi-cinemapettai
chinmayi-cinemapettai

இவங்க குரூப்ல ஒருத்தரை குறைசொல்லி விட்டால் போதும், இவர்களது கைக்கூலி அவர்களது இஷ்டத்திற்கு எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசுவார்கள்’ என்றும் மற்றொரு பதிவில், ‘நான் பதிவிடும் கருத்து பிடிக்கலை என்றால் விமர்சனம் செய்.

ஒருத்தரை மதிக்கிற தன்மை எனக்கு இருக்குது. என்னை மாமி, அது இதுன்னு சொன்னா உனக்கெல்லாம் மரியாதையை கிடையாது’ என்று சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன்கள் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்