Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமல்ஹாசனை வைத்து மீண்டும் மீடூ விவகாரத்தை இழுத்த சின்மயி.. ஆண்டவர் பதில் என்ன
நடிகர் கமலஹாசன் தனது குருநாதரான கே. பாலச்சந்தர் அவர்களுக்கு தனது அலுவலகத்தில் சிலை திறந்து வைத்தார். இதற்கு தமிழ் சினிமாவில் பல முக்கிய ஆட்கள் அழைக்கப்பட்டிருந்தனர். தலைவர் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியை வைத்து மீடு விவகாரத்தை மீண்டும் சின்மயி வம்புக்கு இழுத்துள்ளார். ஆமாம். அந்த நிகழ்ச்சியில் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அதனைப் பார்த்த சின்மயி பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பியுள்ளார்.
அவர் கூறியதாவது, நான் கூறுவது அந்த புகைப்படத்தில் உள்ள வைரமுத்துவை தான் என்றும், ஒருவன் மீது பாலியல் குற்றச்சாட்டு விழுந்தால் அவனால் வெளியே தலைகாட்ட முடியாது என்றும் கூறினார். மேலும் இந்த கேவலத்திற்குப் பிறகு திமுக நிகழ்ச்சிகளிலும், ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
ஆனால் அவரால் பாதிக்கப்பட்ட நான் தடை செய்யப்பட்டேன். இதுதான் சினிமா பெரியவர்கள் எனக்கு கொடுத்த நீதி என மொத்த சினிமா உலகத்தினரையும் வம்புக்கு இழுத்துள்ளார். இதனால் மீண்டும் ஒரு பெரிய சர்ச்சை உருவாக வாய்ப்பு இருப்பதாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
